இந்த படம் ஓடுமா?!.. மரண மாஸ் படத்தையா இப்படி சந்தேகப்பட்டார் ரஜினி?...
2022ல் தேவா பிறந்தநாளான நவ.20ல் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது தான் தேவா தி தேவா. நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இப்படி பேசினார்.
பாட்ஷா படம் வந்து பார்த்தேன். பார்த்ததும் ஆச்சரியமா இருந்தது. எனக்கு வந்து நம்பிக்கையே வரல. நான் கேட்டேன். அண்ணாமலை மாதிரி இருக்குமா? பிளாஷ்பேக் உள்ள பிளாஷ்பேக். இதுல ஆக்ஷன்ஸ்லாம் காட்டல. எனக்கு வந்து ஒரே டபுட்டா இருக்கு.
படம் எப்படின்னுலாம் தெரியாது. படம் வந்து மியூசிக் பண்றதுக்கு பேக்ரவுண்டு பண்றதுக்கு வந்து மியூசிக் டைரக்டரத் தான் பர்ஸ்ட் காட்டுவாங்க.
சரி. எனக்கு வந்து பிரசாத் ஸ்டூடியோவுல தேவா சாரு, சுரேஷ் கிருஷ்ணா எல்லாரும் படம் பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சது. அப்புறம் வந்து தேவா சாருக்கு அவரசமா போன் பண்ணுனேன். படம் எல்லாம் முடிஞ்ச பிறகு. எப்படி இருக்கு சார் படம்?
சார் என்ன சார் இப்படி கேட்குறீங்க? எப்படி இருக்கா...ன்னு கேட்டாரு. இல்ல சார்... அண்ணாமலை மாதிரி இருக்கான்னு கேட்டேன். அண்ணாமலையா? சார் பத்து அண்ணாமலை சார் இது. அப்படின்னு சொல்றாரு. எனக்கு ஆச்சரியம். 10 அண்ணாமலையான்னு...
படம் வந்து எல்லாம் முடிஞ்சபிறகு பர்ஸ்ட் காப்பிக்கு ரீ ரிக்கார்டிங், மிக்சிங் எல்லாமே பண்ணிட்டு அப்ப மேனா தியேட்டர்னு இருந்தது. அங்க உட்கார்ந்து படம் பார்க்குறோம்.
மியூசிக்ல வந்து அந்தப் படத்தை எப்படி ஏத்திருக்காருன்னா... என்ன பேக்ரவுண்டு... என்ன ஒரு மாஸ் பிஜிஎம், அப்படியே வந்து சுரேஷ்கிருஷ்ணா, நம்மோட வேலை எல்லாம் ஒரு 50 பர்சன்ட் இருந்தா கூட தூக்கி நிக்க வச்சது தேவா சார் தான்.
அதுல எந்த சந்தேகமும் கிடையாது. 80ஸ்ல, 90ஸ்ல அந்த மண்வாசனை புதுப்புது மெட்டுகளைப் பொட்டு இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறக்குறாரு. அப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது இன்னொரு இசைப்புயல் வருது. ஏ.ஆர்.ரகுமான்.
இளையராஜாவோ, ஏ.ஆர். ரகுமானோ பேக்ரவுண்டோட வந்தாங்க. ஆனா இவருக்கிட்ட எதுவுமே இல்ல. ஆனா கானான்னு ஒரு புதுப்பாட்டையே உருவாக்குனாரு. அதுக்கு அவரோட உழைப்பு, திறமை, மனிதத்தன்மை தான் காரணம்.