தமிழ் சினிமா ஆரம்ப காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2000க்கு முன்னர் மிகவும் ஆரோக்கியமான சூழலில் இருந்ததாம். ஒரு படம் தயாரிப்பாளருக்கு விநியோகஸ்தர்களுக்கு தியேட்டர் அதிபர்களுக்கு எவ்வளவு லாபம் கொடுத்தது என்பதை வைத்தே போட்டி இங்கு இருந்தது. ஒருவேளை குறைவாக லாபம் கொடுத்து விட்டாலோ அல்லது நஷ்டம் ஏற்பட்டாலோ, மீண்டும் அவருக்கு ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்று ஒரு வெற்றிப்படத்தை கொடுப்பார்கள். ஆனால், தற்போது நிலைமை வேறு என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் விநியோகஸ்தர் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினார். அப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய ஓர் நல்ல தகவலை நமக்கு கூறினார். அதாவது 2007 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் சிவாஜி. கிட்டத்தட்ட அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் அதிக பட்ஜெட் திரைப்படம் இதுதான்.
அவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால் அதற்கு தகுந்தாற்போல வியாபாரம் ஆக வேண்டும். ஆனால், இதற்கு முன்னர் வெளியான சந்திரமுகி படம் வியாபாரத்தை விட இந்த படத்தின் விலை இரண்டு மடங்காக இருந்தது. அதனால் , விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவதற்கு பயந்து நின்றனர்.
அந்த சமயம் இதனை அறிந்து ரஜினிகாந்த் தனது சம்பளத்தை விட்டு கொடுத்து, இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யுங்கள் பிறகு லாபம் வந்தால் பார்த்துக்கொள்ளலாம். அதன் பின்னர் சம்பளம் கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தாராம்.
அதன் பிறகுதான் திரைப்படம் வினியோகஸ்தர்களிடம் கொடுக்கப்பட்டு, தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் பின்னர் படத்தின் வெற்றியை நாம் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. படம் இதுவரை இல்லாத தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளை முறியடித்தது.
தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்மிற்கு மிகப்பெரிய லாபத்தை இந்த படம் கொடுத்தது. அதனால் பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை தான் ஏவிஎம் நிறுவனம் ரஜினிகாந்திற்கு அந்த சமயம் கொடுத்ததாம்.
இதையும் படியுங்களேன் – விஜய் கிட்ட வேணாம்னு சொன்னேன் கேக்கல படம் அட்டர் பிளாப்.! ரகசியம் உடைத்த பிரபலம்.!
இவ்வாறு தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் லாபம் சம்பாதித்தார்களா இல்லையா என்பதை மனதில் வைத்து தான் முன்புவரை சினிமா இருந்தது. ரஜினி, கமல் என அனைவரும் அப்படித்தான் இருந்தனர். ஆனால், தற்போது எந்த நடிகரின் சம்பளம் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதை பொருத்தே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழல் அல்ல என தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…