80களில் ரஜினிக்கு ஹிட்டான படங்கள்
80களில் வெளியான இப்படங்கள் தான் ரஜினிகாந்த்துக்கு திரையுலகவாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. அவரைத் தொடர்ந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதும் இந்த படங்கள் தான்.
ஏராளமான ரசிகர்களைத் தன் பக்கம் கவர்ந்ததும் இவை தான் என்றால் யாராலும் மறுக்க முடியாது. என்ன ஒரு ஸ்டைல், என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு வசனம்…அது இவருக்கு மட்டும் தான் பொருந்தும்…! இவற்றில் பெரும்பாலும் ஏவிஎம்மின் படைப்புகளாகவும், எஸ்.பி.முத்துராமனின் இயக்கமுமாகத் தான் இருக்கும். அவற்றில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
காளி
1980ல் மகேந்திரன் திரைக்கதையில் ஐ.வி.சசியின் இயக்கத்தில் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களுள் இதுவும் ஒன்று.
ரஜினிகாந்த், விஜயகுமார், சிரஞ்சீவி, சீமா, படாபட் ஜெயலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். அடி ஆடு, அழகழகா, காளி பத்ரகாளி, தித்திக்கும், வாழு மட்டும் ஆகிய பாடல்கள் உள்ளன.
பொல்லாதவன்
1980ல் ஸ்ரீநிவாசன் இயக்கிய இந்தப்படம் ரஜினிக்கு மெகா ஹிட்டானது. லட்சுமி, ஸ்ரீபிரியா, சுருளிராஜன், டெல்லிகணேஷ், செந்தாமரை உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். நான் பொல்லாதவன், சின்னக்கண்ணனே, அதோ வாராண்டி, நானே என்றும் ராஜா ஆகிய பாடல்கள் உள்ளன.
முரட்டுக்காளை
1980ல் ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் முரட்டுக்காளை. ரஜினிகாந்த், ரதி, ஜெய்சங்கர், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சுமலதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். இந்தப் பூவிலும், மானே மச்சான், புது வண்ணங்கள் ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.
போக்கிரி ராஜா
1982ல் ஏவிஎம்மின் படைப்பாக வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜனிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். கடவுள் படைச்சான், போக்கிரிக்கி போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லி ஆகிய பாடல்கள் உள்ளன.
பாயும்புலி
1983ல் வெளியான ஏவிஎம் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர், ஜனகராஜ், சத்யராஜ், மனோரமா, வி.கே.ராமசாமி, சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் ஆடி மாசம் காத்தடிக்க, ஆப்பக்கட அன்னக்கிளி, வா வா மாமா, பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் ஆகிய மெகா ஹிட் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நல்லவனுக்கு நல்லவன்
1984ல் ஏவிஎம்மின் படைப்பாக வெளியானது. எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி, வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், விசு உள்பட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் ரகங்கள். சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு, உன்னைத் தானே தஞ்சம், வச்சுக்கவா, முத்தாடுதே, நம்ம முதலாளி, என்னைத் தானே ஆகிய மெகா ஹிட் பாடல்கள் உள்ளன.
Jayam ravi:…
Rashimika mandana:…
'திரைக்கதை மன்னன்'…
Actress vedhika:…
ஆறு ஆண்டுகளுக்கு…