ரஜினி முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாத மனோரமா... சாதாரண பிரச்சனையா அது..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் மனோரமாவுக்கும் இடையே ஒரு முறை மோதல் ஏற்பட்டது. அதுவேறு ஒன்றும் இல்லை. மனோராமாவைப் பொருத்தவரை அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த பல படங்களில் நடித்தவர். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். அப்போது அவருக்கு சப்போர்ட்டாகத் தான் சில விஷயங்களைப் பேசினார்.
அந்தப் பிரச்சனையை ரஜினி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் அவர் அதை எல்லாம் மறந்து மனோரமாவை மீண்டும் தனது படங்களில் நடிக்க வைத்தார். அதெல்லாம் அவங்களுக்குள்ள பழி வாங்குற எண்ணம் எல்லாம் கிடையாது. அரசியல்ல விவாதம் பண்ணினாங்க. அவ்வளவு தான் என்றார் ரமேஷ் கண்ணா.
அதிமுகவில் மனோரமா சேர்ந்து பிரசாரங்களில் பேசும்போது ரஜினியைப் பற்றி கடுமையாக விமர்சித்தார். யாருமே அந்த அளவுக்கு அவரைப் பேசியது இல்லை. அதனால் 6 மாதம் படவாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளார்.
ரஜினி மனோரமாவுக்கு மீண்டும் வாய்ப்பளித்த படம் தான் அருணாச்சலம். இருவரும் படப்பிடிப்பில் அருகே இருந்தும் ரஜினி அதுபற்றி எதையும் மனோரமாவிடம் கேட்கவே இல்லையாம். குற்ற உணர்ச்சியில் ரஜினியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தாராம் மனோரமா என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் தெரிவித்துள்ளார்.
பில்லா படத்தின் போது சூட்டிங் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ரஜினி ஆடுவதைப் பார்த்து பரவாயில்லையே பைத்தியம் நல்லா ஆடுதேன்னு சொன்னாராம். அதைக் கேட்டதும் அந்த நபரின் சட்டையைப் பிடித்து விளாசியுள்ளார் மனோரமா. 'யாரடா பைத்தியம்னு சொன்னே... அந்தத் தம்பி எவ்வளவ கஷ்டப்பட்டு ஆடிக்கிட்டு இருக்காரு'ன்னு கடுமையாகத் திட்டினாராம்.
அது மட்டுமல்லாமல், அந்த நபரை வெளியே அனுப்பினால் தான் சூட்டிங் நடக்கும்னும் தடாலடியாக சொல்லி விட உடனே அவரை வெளியே துரத்தி விட்டுள்ளார்கள் படக்குழுவினர். அந்த சம்பவம் ரஜினி மனதில் ஆழப்பதிந்து விட்டது. அதனால் மனோரமா தன்னை வார்த்தைகளால் அப்போது அரசியல் பிரச்சாரங்களில் பேசியதை ரஜினி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன்பிறகு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசும்போது மனோரமாவைப் பற்றி இப்படித் தெரிவித்துள்ளார். 'ஒருவாட்டி அரவணைச்ச கை அது. ஆயிரம் முறை அடிச்சாலும் ஏத்துக்குவேன்' என்று. அதைப் பார்த்த மனோரமாவுக்கு நெஞ்சு குளிர்ந்து போனதாம்.
ரஜினிகாந்த் உடன் மனோரமா பில்லா, அடுத்த வாரிசு, குரு சிஷ்யன், மன்னன், எஜமான், அருணாச்சலம் என பல படங்களில் நடித்துள்ளார்.