சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் ரஜினிகாந்த்தின் எளிமையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதே போல் ரஜினிகாந்தின் பண்பை பாராட்டாத சினிமா கலைஞர்களே இல்லை என்று கூறலாம். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மிகவும் மரியாதையோடு அணுகுவாராம் ரஜினிகாந்த். அந்த வகையில் இதுவரை எவரும் நினைத்தே பார்க்க முடியாத ஒரு காரியத்தை ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.
1997 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அருணாச்சலம்”. இத்திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் பழம்பெரும் நடிகரான வி.கே.ராமசாமி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
வி.கே.ராமசாமி ரஜினிகாந்த்தை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என பல முறை முயன்றார். ஆனால் ரஜினிகாந்த் அப்போது மிக பிசியாக இருந்ததால் வி.கே.ராமசாமிக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் வி.கே.ராமசாமியை வீட்டிற்கு அழைத்த ரஜினிகாந்த், “உங்கள் படத்தில் என்னை நடிக்கவைக்க வேண்டும் என பல முறை என்னிடம் வந்து கேட்டீர்கள். நானும் நிச்சயமாக நடிக்கிறேன் என கூறினேன். ஆனால் இப்போது நான் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளேன். மேலும் நான் படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டேன். ஆதலால் உங்களுக்கு என்னால் கால்ஷீட் தரமுடியவில்லை.
இப்போது அருணாச்சலம் என்று ஒரு படம் தயாரிக்கிறேன். அந்த படத்தில் கிடைக்கும் லாபத்தை சில பேருக்கு பங்கிட்டு தரலாம் என இருக்கிறேன். அதில் உங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும்” என கேட்டாராம். இந்த சம்பவம் குறித்து வி.கே.ராமசாமி தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறாராம்.
இதையும் படிங்க: “எல்லாமே போயிடுச்சு… வாடகை வீட்லதான் இருக்கேன்”… கஞ்சா கறுப்புக்கு இப்படி ஒரு அவலநிலையா?? அடப்பாவமே!!
“ரஜினிகாந்த் மாதிரி வித்தியாசமான நடிகரை நான் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட ஒரு பண்பாளர் அவர். எனக்கு உதவ வேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம். நான் அவரிடம் கால்ஷீட் கேட்டேன், அதை அவர் தரமுடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அருணாச்சலம் படத்தில் வந்த லாபத்தில் ஒரு பெரிய பங்குக்கான தொகையை எனக்கு கொடுத்தார் ரஜினிகாந்த்.
இத்தனைக்கும் அந்த படத்தில் நான் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்யவில்லை. இது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நான் நடிக்கவும் செய்தேன். அதில் நடித்ததற்கு தனியாக ஒரு பணம் கொடுத்தார். சினிமாவில் நான் திரைப்படங்களை எடுத்து எனது சொத்துக்களை எல்லாம் இழந்து நின்ற நேரத்தில் எதிர்காலத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு ரஜினிகாந்த் செய்த உதவியாகவே அதனை நான் பார்க்கிறேன்” என வி.கே.ராமசாமி அவரது நூலில் ரஜினிகாந்த் செய்த உதவியை குறிப்பிட்டிருக்கிறாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஏ ஆர்…
Ayothi: அயோத்தி…
திரைத்துறையில் நடிகர்…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…