இது மட்டும் நடந்திருந்தா படையப்பா படம் இன்னும் பட்டையைக் கிளப்பியிருக்குமே...ஏன் நடக்காமப் போச்சு?
படையப்பா ரஜினிகாந்த் திரை உலக வரலாற்றில் ஒரு பெரிய மைல் கல். பாட்ஷாவிற்குப் பிறகு படையப்பா படத்தையே ரசிகர்கள் பெரிதும் சிலாகித்துச் சொல்வார்கள்.
கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு சமமான கதாபாத்திரம் வில்லி ரம்யாகிருஷ்ணனுக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. நீலாம்பரியாக வரும் அந்த கேரக்டர் இன்றளவும் மறக்க முடியாது.
இந்தப்படத்தில் இன்னொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தப்படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் முதலில் நக்மா தான் நடிப்பதாக இருந்ததாம். நக்மா ரஜினியுடன் ஏற்கனவே பாட்ஷா படத்தில் நடித்து பட்டையைக் கிளப்பியிருப்பார்.
இந்தப்படத்திற்காக அப்பாவி பெண் வசுந்தரா கேரக்டரில் நடிகை சௌந்தர்யா நடித்திருந்தார். அந்த வேடத்திற்கு முதலில் நக்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஷ_ட்டிங்கும் சில நாள்கள் நடந்து வந்தது. ஆனால் என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை.
அவர் திடீரென விலகி விட்டார். அதன் காரணம் என்னவென்றே தெரியவில்லை. அதன்பிறகு தான் நடிகை சௌந்தர்யாவை அந்தக் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளனர். அவரும் அந்தக் கேரக்டருக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தி விட்டார்.
1996ல் வெளியான இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே கமல் நடித்த இந்தியன் படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் இந்தியன் பட வசூலை முறியடித்துள்ளது.
படத்தில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் காம்பினேஷன் சூப்பராக இருக்கும். மணிவண்ணன், நாசர், செந்தில், ரமேஷ்கண்ணா, அப்பாஸ், வடிவுக்கரசி, ராதாரவி என ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். என் பேரு படையப்பா, மின்சாரப் பூவே, சுத்தி சுத்தி, வெற்றி கொடி கட்டு, ஓஹோஹோ ஹோ கிக்கு ஏறுதே ஆகிய பாடல்கள் உள்ளன.