ரஜினி, கமல் இருவரின் படங்களையும் பிளாப்பாக்கியவர் நடிகர் மோகன். இவரது படங்கள் குறித்து பிஆர்ஓ நிகில் முருகன் இப்படி சொல்வாராம். இவரது படங்களில் 20க்கும் மேல் வெள்ளி விழா கொண்டாடியவை. 300 நாள், 250 நாள் ஓடிய படங்களும் இருக்கிறது.
ராமராஜன் ரொம்பவே தன்னடக்கத்துடன் ரஜினி குறித்து இப்படி சொன்னாராம். என்னோட ஒரு படம் தான் அவரு படத்தை விட அதிக நாள் ஓடியது. மற்றபடி அவர் படங்கள் தான் நிறைய நாள் ஓடியது. தான் உண்மையிலேயே சூப்பர்ஸ்டார் என்றாராம்.
இதையும் படிங்க… ஆதாயம் இல்லாம செய்யமாட்டார் ஆண்டவர்! கமல் செஞ்ச வேலையால் பணம் கொட்டுச்சு.. மிதப்பில் தயாரிப்பாளர்
தற்போது நாலாம் தலைமுறைக்கு மத்தியில் இந்த இரு ஹீரோக்களும் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர். சாமானியனாக வரும் ராமராஜன் அதிரடி ஆக்ஷன் காட்ட உள்ளார். அதே போல தளபதி விஜயின் கோட் படத்தில் வில்லனாக வந்து மைக் மோகன் மிரட்ட உள்ளார்.
ரஜினிக்கு அடுத்ததாக வர உள்ள வேட்டையன் படம் ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் பட வரிசையில் வரும் முக்கியமான படம். காரணம் என்னன்னா இந்தப் படத்தை எடுப்பவர் ஒரு பத்திரிக்கையாளர். அவர் தான் இயக்குனர் த.செ.ஞானவேல். இவர் மிகுந்த களப்பணியை செய்து பெரிய போராட்டக் கதையைத் தயார் செய்து வைத்துள்ளார்.
டெல்லியில் சோலி சொராப்ஜி என்பவர் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்டவர். சட்டத்திற்கு விரோதமாக அவர் என்கவுண்டர் செய்யப்பட்டவர். ஆனால் இந்த கேஸ் இப்போது என்னாச்சு என்பது யாருக்குமே தெரியாது. அப்படியான ஒரு கதை தான் தற்போது ஞானவேல் எடுத்துள்ளாராம். ரஜினியோட வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாக இருக்குமாம்.
ரஜினி நடந்து வர்ற ஸ்டைலை மட்டும் தான் தர்பார், பேட்ட படங்களில் காட்டுகிறார்கள். இது மட்டும் இயக்குனர்களோட வேலை இல்லை. அவரிடம் இருந்து நுணுக்கமான நடிப்பை வெளியில் கொண்டு வரணும்.
ஆடம்பரமும், அழகியலும் இல்லாவிட்டாலும் ரஜினி தேர்ந்த நடிப்பைக் காட்டும் திறன் படைத்தவர். வயது குறைந்தவராகக் காட்டுவது மட்டும் இளம் இயக்குனர்களின் வேலை அல்ல. அவரது பிராணாயாமம், யோகா, ஆன்மிகம் என எல்லாமும் தான் அவரை இளமையாக வைத்துள்ளன. தர்மதுரை படத்தில் ரஜினியின் மனைவி கௌதமி வீட்டு வேலைகளை எல்லாம் பார்க்கிறார் என தெரிந்து கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்டு விடுகின்றனர்.
இதையும் படிங்க… குருநாதருக்காக ரஜினிகாந்த் செய்த விஷயம்… பழசை மறக்காம இருக்கதால தான் அவர் சூப்பர்ஸ்டார்..
இந்தத் தகவலைத் தெரிந்த ரஜினி காட்டும் முகபாவனைகள் தான் பெரிய கலைஞனின் திறமை. அப்படிப்பட்ட ரியாக்ஷனை இளம் இயக்குனர்கள் கொண்டு வரவில்லை. ஆனால் வேட்டையன் படத்தில் த.செ.ஞானவேல் ரஜினியிடம் இருந்து ஒரு புதிய பரிணாமத்தை வாங்கியுள்ளாராம். அதனால் இது ரஜினிக்கு மட்டுமல்ல பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கும் இது ரஜினியின் நடிப்பைப் படிக்கக்கூடிய ஒரு பாடமாக இருக்கும்.
மேற்கண்ட தகவலை பிரபல எழுத்தாளர் தேனி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…