மலேசியாவாசுதேவன் கடைசியாக பேசுன அந்த வார்த்தை... நெகிழ்ந்து பேசிய ரஜினி

by sankaran v |   ( Updated:2024-09-09 15:01:09  )
MVD r
X

MVD r

இன்று வேட்டையன் படத்தில் 'மனசிலாயோ' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத் கலக்கியுள்ளார். இந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். இதையொட்டி மலேசியாவாசுதேவனைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை ரஜினிகாந்த் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

மலேசியா வாசுதேவன் அவர்கள் என்னுடைய அருமையான நண்பர். நல்ல பாடகர். நல்ல மனிதர். பல திறமைகள் கொண்டவர். வாஸ்தவத்தில் அவருடைய குரல் என்னுடைய குரலுக்கு ஒத்துப் போகும். அவர் எனக்குப் பாடுன பல பாட்டுகள் சூப்பர்ஹிட்.

Msanasilayo

Msanasilayo

உதாரணத்துக்கு முரட்டுக்காளை பொதுவாக என் மனசுத் தங்கம், தர்மயுத்தம் ஒரு தங்க ரதத்தில், போக்கிரி ராஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா என பல பாடல்கள். என் மேல அவருக்கு ரொம்ப பிரியம். கடைசி காலங்களில் என்னைப் பார்க்கணும்னு ஒருவாட்டி சொன்னாங்க. நான் வந்து சரி. ஏதோ ஒரு புரோகிராமா இருக்கும்னு சொல்லிட்டு சரி வாங்கன்னு சொன்னேன்.

வந்துருந்தாங்க. அவரு சொன்னத பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. என்ன விஷயம்னு கேட்கும்போது ஒண்ணுமில்ல. 'உங்களை ஒருவாட்டி பார்த்துரணும்னு தோணுச்சு'.

'ஏன் என்ன தமாஷா இருக்கேன்'னு கேட்டேன். 'இல்ல. எனக்கே தெரிகிறது. என்னோட கடைசி காலத்துல தான் இருக்கேன். சில பேரை நான் பார்க்கணும்னு இருந்தேன். அதுல நீங்களும் ஒருத்தர்'னு சொல்லும்போது எனக்குத் தெரியாமலேயே என் கண்ணுல தண்ணீ வந்துருச்சி.

அவ்வளவு பெரிய நல்ல நண்பர். எப்பவுமே இந்த காலம்கறது எவ்வளவு பெரிய பேரும் புகழும் பெற்றிருந்தா கூட அந்தக் காலத்தைத் திரையால மறைச்சிடுறோம். அவரோட புகழ் மங்காம இருக்கறதுக்கு அவருடைய புதல்வர் எடுத்துருக்குற முயற்சியை நான் மிகவும் பாராட்டுறேன்.

Also read: நடிகைகள் செய்த லீலை! தெறித்து ஓடிய நிவின் பாலி! எல்லாமே பிளான்!.. பாடகி சுசித்ரா பகீர்!..

அவருடைய குடும்பத்தாருக்கு ஆண்டவன் எல்லா நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்து மலேசியாவாசுதேவனின் பேரும் புகழும் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Next Story