மெகா ஹிட் கொடுத்த ரஜினி பட தலைப்புகளில் புதுப்படங்கள் - ஒரு பார்வை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். 168 படங்கள் நடித்து செம மாஸ் ஹிட்டுகளைக் கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் படத்தின் பெயரை வைத்து பல தடவை புதுப்படங்கள் வந்துவிட்டன. அத்தனையும் ரஜினி படங்களைப் போல சூப்பர் ஹிட் ஆகவில்லை. அவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
தர்மதுரை படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து செம ஹிட். விஜய்சேதுபதி நடித்த தர்மதுரையும் ஹிட். அடுத்து ரஜினியின் தங்கமகன். அந்தக்காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தனுஷ் நடித்த தங்கமகன் பிளாப் ஆனது. ரஜினி நடித்த மாப்பிள்ளை படம் செம ஹிட். தனுஷ் நடித்த படம் செம பிளாப்.
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ராஜாதி ராஜா மாஸ் ஹிட் ஆனது. இன்று வரை அந்தப் படம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா பிளாப் ஆனது.
சூப்பர்ஸ்டார் நடித்த மாவீரன் படம் அப்பவே சுமாராகத் தான் ஓடியது. அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிச்சிக்கிட்டு இருக்காரு. அது ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தான் எப்படி இருக்கும்னு தெரியும். இந்தப் படத்தோட டைரக்டர் மண்டேலா படத்தை எடுத்த மடோன் அஷ்வின்.
நான் சிகப்பு மனிதன் படம் ரஜினிகாந்த்தின் நடிப்பில் செம ஹிட்டானது. அதே தலைப்பில் விஷால் நடித்த படம் சுமாராக ஓடியது. குரு சிஷ்யன் படத்தில் ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்தனர். அப்போது அந்தப் படம் செம மாஸ் ஹிட்டானது. குறைந்த பட்ஜெட்ல வெறித்தனமாக ஓடிய படம் இது. அதே போல சத்யராஜ் நடித்த குருசிஷ்யன் படுபிளாப் ஆனது.
வேலைக்காரன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் சுமாராக ஓடியது. மோகன்ராஜா டைரக்ட் பண்ணியிருந்தார்.
விடுதலை படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சுமாராகத் தான் ஓடியது. நடிகர் விஜய்சேதுபதி, சூரியை வைத்து வெற்றிமாறன் விடுதலை படத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இவர் ரஜினியின் ரசிகர் என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
ரஜினி, ரோஜா, மீனா நடித்த வீரா படம் செம ஹிட்டானது. கிருஷ்ணா நடித்த வீரா படம் மொரட்டு மொக்கையானது. இந்தப் படம் வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது.
சந்திரமுகி தமிழ்சினிமாவில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சரித்திரம் படைத்தது. அதே படத்தை 2ம் பாகமாக எடுத்து வருகிறார்கள். இதில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அதே படத்தின் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். இந்தப் படத்திலும் வடிவேலு நடிக்கிறார். ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தான் இந்தப் படம் எப்படி இருக்குன்னு தெரியும்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜியுடன் இணைந்து நடித்த படம் படிக்காதவன். செம மாஸ் ஹிட்டானது. அதுக்கு அப்புறமா தனுஷ் நடித்த படிக்காதவன் படம் வந்தது. சுமாராகத் தான் ஓடியது.
ரஜினிகாந்த் நடித்த பாயும்புலி படம் செம ஹிட். விஷால் நடித்த பாயும் புலி பிளாப் ஆனது.
போக்கிரி ராஜா ரஜினிகாந்தின் கேரியரில் செம மாஸான படம். அதே தலைப்பில் ஜீவா நடித்த படம் படு பிளாப். தில்லுமுல்லு படம் வேற லெவல். ரஜினி முற்றிலும் மாறுபட்ட 2 கேரக்டர்களில் நடித்து அசத்தினார். இந்தப் படத்திற்கு அப்பவே செம வசூல் ஆனது. அடுத்து சிவா நடித்த தில்லு முல்லு படம் வெளியானது. இது சுமாராகத் தான் ஓடியது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த துடிக்கும் கரங்கள் படம் மாஸ் ஹிட் கொடுத்தது. அதே பெயரில் தற்போது புதுப்படம் தயாராகி வருகிறது. விமல் நடிக்க வேலுதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படம் ரிலீஸ்சுக்கு அப்புறம் தான் எப்படி இருக்கும்னு தெரிய வரும்.
நெற்றிக்கண் படத்தைப் பார்த்தால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேரியரிலேயே செம மாஸ் படம். அடுத்து நயன்தாரா நடித்த படம் சுமாராகப் போனது. அடுத்து சூப்பர்ஸ்டார் நடித்த கர்ஜனை படம் செம ஹிட் அடித்தது. திரிஷா நடித்த கர்ஜனை படம் படு பிளாப் ஆனது.
ரஜினிகாந்த் நடித்த ரங்கா படம் சூப்பராக இருந்தது. அதே பெயரில் சிபிராஜ் நடித்த படம் படு பிளாப் ஆனது. முரட்டுக்காளை படம் ரஜினி கேரியரிலேயே வெறித்தனமாக ஹிட்டானது. அதே பெயரில் சுந்தர்.சி. நடித்த படம் படுபிளாப் ஆனது.
அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்த படம் தீ. இந்தப் படத்தின் பெயரில் சுந்தர்.சி. நடித்த படம் படு பிளாப். இது சுமாராகத் தான் ஓடியது.
ரஜினியின் நடிப்பில் காளி படம் வெளியானது. மாஸ் ஹிட் இது. அதே பெயரில் விஜய் ஆண்டனி நடித்த படம் சுமாராகப் போனது.
ரஜினியின் பொல்லாதவன் படம் வெறித்தனமாக இருக்கும். அதே பெயரில் தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய படமும் செம ஹிட்.
ரஜினி நடித்த கழுகு படம் செம ஹிட். அதே பெயரில் கிருஷ்ணா நடித்த படம். மலையில் இருந்து விழுந்து குதித்து தற்கொலை செய்தவர்களைத் தூக்கிட்டு வரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். இதுவும் ஹிட் தான்.
ரஜினியின் மனிதன் படம் கமலின் நாயகன் கூட போட்டி போட்டு வந்தது. ரெண்டு படமும் செம ஹிட். அதே போல உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் படம் ஹிட் அடித்தது.
நான் மகான் அல்ல படம் ரஜினிகாந்த் நடிப்பில் செம ஹிட்டானது. அதே பெயரில் கார்த்தி நடித்த படமும் ஹிட்டானது.
அடுத்து ரஜினியும், கமலும் இணைந்து கலக்கிய நினைத்தாலே இனிக்கும் படம் செம ஹிட் அடித்தது. பாடல்கள் அனைத்தும் முத்து முத்தாக இருந்தன. அதே பெயரில் பிருத்விராஜ், டிரிக்கர் சக்தி நடித்த படம் சுமாராகப் போனது.
ரஜினியின் நடிப்பில் வெளியான பில்லா படம் அவரது கேரியரையே மாற்றியது. அஜீத் நடித்த பில்லா படமும் மாஸ் ஹிட்டானது. அஜீத் படத்தில் நல்ல வசூல் வேட்டை செய்தது.