Connect with us

Cinema History

ரஜினிகாந்த் படங்களில் பட்டையைக் கிளப்பிய 2கே படங்கள்

2000மாவது ஆண்டில் அடி எடுத்து வைத்ததும் நடிகர் ரஜினிகாந்த் படங்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆகின. 2000;த்திற்குப் பிறகு ரஜினிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற கணக்கில் தான் வெளியாயின.

அதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 1999 படையப்பாவிற்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தான் ரஜினிகாந்துக்கு படங்கள் வந்தன. அந்த பட்டியலில் சிலவற்றைப் பார்ப்போம்.

பாபா

baba rajni

2002ல் வெளியான படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் முழுவதும் ஆன்மிகம் இழையோடியது. அதனால் ரசிகர்களுக்கு இது புது விருந்தாக இருந்தது. கிட்டத்தட்ட ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரருக்குப் பிறகு ஆன்மிகம் கண்ணோட்டத்தில் வெளியான படம் இதுதான். இந்தப்படத்தில் ரஜினிகாந்த் பாபாவாகவும், மகா அவதார் பாபாஜியாகவும் நடித்துள்ளார். இவற்றில் பாபாஜியாக வரும் ரஜினி அந்த வேடத்திற்கு குரல் மட்டுமே அசரீரி போல கொடுத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்தப்படத்தில் ரஜினிகாந்த்தின் வழக்கமான ஸ்டைலைக் காட்டிலும் ஒரு படி மேல் போய் காலில் போட்டிருக்கும் ஷ_வில் இருந்தெல்லாம் தீப்பொறி பறக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. கத்தியை வீசி விட்டால் ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பவும் ரஜினியின் கைக்கு வருகிறது.

இந்தப்படத்தில் வில்லனாக நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. கருணாஸ், ரியாஸ்கான், வைஷ்ணவி, சங்கவி ஆகியோரும் நடித்துள்ளனர். மாயா மாயா, ரம்யா கிருஷ்ணன், நாசர், பாபா கிச்சு கிச்சு தா, டிப்பு டிப்பு, ராஜ்யம் இல்லை ஏமையா, சக்தி கொடு, பாபா ராப் ஆகிய பாடல்கள் உள்ளன.

சந்திரமுகி

Chandramugi

2005ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. வித்யாசாகரின் இசையில் படம் முழுவதும் திகில் தெறித்தது. ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வினீத், மாளவிகா, கே.ஆர்.விஜயா, மதன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

சென்னையில் ஒரு திரையரங்கில் ஓராண்டுகள் ஓடி சாதனை படைத்தது. படையப்பாவின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. தேவுடா, தேவுடா, கொக்கு பற பற, அத்திந்தோம் திந்தியும், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், ராரா சரசகு ராரா, அண்ணனோட பாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.

சிவாஜி

Sivaji rajni

2007ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியர் ஷங்கர். ஏவிஎம் நிறுவனத்தின் படைப்பு. அதனால் எதிர்பார்ப்பும் எகிறியது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆயின. ரஜினியுடன், ஷ்ரேயா, சுமன், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பலேலக்கா, ஸ்டைல், வாஜி வாஜி, அதிரடி, சகானா, த பொஸ், சகாரா ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த் மொட்டை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குசேலன்

Kuselan

இந்தப்படத்தில் ரஜினிகாந்த் அவரது ரியல் கேரக்டராகவே வருகிறார். 2008ல் வெளியான இந்தப்படம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தபோதும் அதைப் பூர்த்தி செய்யவில்லை. பாலச்சந்தரின் தயாரிப்பு. பி.வாசு இயக்கியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து பசுபதி, பிரபு, மீனா, வடிவேலு, சந்தானம், நயன்தாரா, விஜயகுமார், சின்னிஜெயந்த், சந்தானபாரதி, லிவிங்ஸ்டன், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தியாகு உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சலூன் கடை சண்முகமாக வரும் வடிவேலு படத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார். ரஜினியின் தீவிர ரசிகராக வரும் அவர் ரஜினியை நேரில் பார்ப்பதற்காகப் போராடுவதும் பார்த்ததும் அவர் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளும் நம்மை பரவசமடையச் செய்கின்றன.

சினிமா சினிமா, சொல்லம்மா, ஓம் ஜாராரே, சாரல், பேரின்ப பேச்சுக்காரன் ஆகிய பாடல்கள் உள்ளன. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

எந்திரன்

ரஜினிகாந்த், ஷங்கர் காம்பினேஷனில் உருவான இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது. ஏனென்றால் ஷங்கர் என்றாலே சிஜி ஒர்க் (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். அதிலும் ஒரு சயின்டிபிக் படம் இது. எந்திரன் அதாவது ரோபோட் சம்பந்தமான இந்தப்படத்திற்கு எவ்வளவு கிராபிக்ஸ் இருக்கும் என்பதையும் அதைக் காணவேண்டும் என்ற ஆவலிலும் ரசிகர்கள் பட்டாளம் கூட்டம் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்தது.

அவர்களின் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாயின என்றே சொல்ல வேண்டும். படம் முழுவதும் எது கிராபிக்ஸ் என்றே தெரியாத அளவிற்கு எடுத்துள்ளார் ஷங்கர். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி விட்டது.

திரைக்கதை சொல்வதில் பாமரனுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருந்தது. இதுவே படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டது. சிட்டி எனும் ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார்.

உடன் இணைந்து நடித்துள்ளவர் ஐஸ்வர்யாராய். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் சூப்பர். லொகேஷன்களும் அருமை. 2010ல் வெளியானது. இது எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை. அவருடன் இணைந்து பாலகுமாரன், சங்கர் ஆகியோரும் எழுதியுள்ளனர். புதிய மனிதா, காதல் அணுக்கள், இரும்பிலே ஒரு இதயம், கிளிமஞ்சாரோ, பூம் பூம் ரோபோ டா ஆகிய பாடல்கள் உள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top