Cinema History
வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்சினிமா உலகின் உச்சநடிகராக இருந்தாலும் அவ்வப்போது சுதந்திரமாக சுற்றவே விரும்புகிறார். அதனால்தான் ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்ததும் ஓய்வுக்காக இமயமலை செல்கிறார். அல்லது விடுமுறைக்காக அமெரிக்கா செல்கிறார். அப்படி அவர் செல்லும்போது பல ஆச்சரியத்தக்க சம்பவங்கள் நடந்ததுண்டு. அப்படி சில தரமான சம்பவங்களை இப்போது பார்ப்போம்.
விடுமுறைக்காக அமெரிக்கா சென்றபோது, ஒருமுறை ரஜினிகாந்த் காலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது திடீரென ரசிகரின் வீட்டுக்குள் சென்று விட்டாராம். அங்குள்ளவர்களுக்கோ இன்ப அதிர்ச்சி. நான் உங்களது தூக்கத்தைக் கெடுத்து விட்டேனா எனக் கேட்கிறார். அதெல்லாம் இல்லை. தொடர்ந்து நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்றனர். அவரது ரசிகர் ஒருவர் டுவிட்டரில் இதற்கான பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதேபோல ஒரு தடவை ரஜினிகாந்த் பெங்களூருவில் தான் நடத்துனராக பணிபுரிந்த பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு ரஜினியை நேரில் பார்த்ததும் ஊழியர்கள் உற்சாகம் அடைந்து விட்டனர். அதேபோல் மும்பை ஏர்போர்ட்டிலும் ரொம்பவும் எளிமையான உடையில் நடந்து செல்லும் வீடியோவும் வைரலானது.
ரஜினிகாந்த் பலமுறை மாறுவேடங்களில் சாதாரணமாக சுற்றித் திரிவாராம். பாதுகாவலரே இல்லாமல் தனது வீட்டிற்கு அருகில் வாக்கிங் போவாராம். இவருடைய இந்த குணம் பலரையும் வியக்க வைக்கிறது.
ரஜினிகாந்த் என்றாலே நினைவுக்கு வருவது அவரது ஸ்பீடுதான். வேகமாகவும், மிடுக்காகவும், ஸ்டைலாகவும் அவர் நடக்கும் நடைக்கு மயங்காதவர்களே இல்லை. வேறு யாரும் எவ்வளவு முயற்சி செய்தாலும் இதுபோன்ற ஸ்டைல் வராது. அது அவருக்கே உரிய தனி ஸ்டைல். அதனால் தான் பாட்ஷா படத்தில் கூட என் வழி தனி வழின்னு பஞ்ச் டயலாக் சொல்லியிருப்பார்.
ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து தற்போது தலைவர் 171 படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார். இது விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனராஜிக்கு மற்றுமொரு தரமான சம்பவமாக இருக்கும் என்றே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.