போடா!..ஆண்டவனே நம்ம பக்கம் இருக்குறான்.. நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! இது ரஜினி ஸ்பெஷல்
ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவை அண்ணாந்து பார்த்தபடி சென்றவர் ரஜினி. இந்த ஸ்டூடியோவுக்குள் வர வேண்டும் என்ற லட்சியத்தில் அயராது உழைத்து திரும்பவும் அந்த நிறுவனம் இயக்கிய படங்களில் நடித்து சக்கை போடு போட்டார். கெட்ட பய சார்....சீவிடுவேன்....இதெப்படி இருக்கு....?
என் வழி தனி வழி....போடா...ஆண்டவனே நம்ம பக்கம் இருக்குறான்...நான் வீழ்வேனென்று நினைத் தாயோ....என்ற டயலாக்கைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் படத்தில் பேசும் சில பஞ்ச் டயலாக்குகளை பற்றி பார்க்கலாம் வாங்க...
வீரா படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக். கண்ணா எங்க அம்மா அடிக்கடி ஒண்ணு சொல்வாங்க. வீரா நீ வாழ்க்கையில நிம்மதியா இருக்கணும்னா அடுத்தவங்களோட பொன் மேலயும், பொருள் மேலயும், பெண்ணு மேலயும் கை வைக்கக்கூடாது. கண்ணு வைக்கக்கூடாதுன்னு...நீ கண் மட்டும் வைக்கல. கையே வச்சிட்ட. அனுபவிச்சியே ஆகணும் என்பார்.
மன்னன் படத்தில் சம்பளத்தைக் கொடுக்குற முதலாளிக்குத் தொழிலாளி உழைச்சி லாபத்தைக் கொடுக்கறான்.
ஆனா போனஸ் கொடுக்குற முதலாளிக்குத் தொழிலாளி எதுவுமே கொடுக்க மாட்டான். ஆனா இந்தத் தொழிலாளி கொஞ்சம் வித்தியாசமானவன்.
போனஸ் கொடுக்குற முதலாளிக்கு வட்டியும் முதலுமா சேர்த்து திருப்பிக் கொடுக்கல...இவன் ஆம்பளயே..இல்ல...என விஜயசாந்தியிடம் பேசிவிட்டு அவரது கன்னத்தில் பளார் என நாலைந்து அறை விடுகிறார்.
இன்னொரு காட்சியில் நான் அன்புக்குக் கட்டுப்படுவேன். ஆணவத்தைக் கட்டுப்படுத்துவேன். அடங்காம இருக்கணும்னு நினைக்கிறவங்கள அடக்குவேன். ஒண்ணு மட்டும் தெரிஞ்சிக்கோ. பொம்பளைங்கள மதிக்கிறவன் தான் ஆம்பள.
ஆம்பளைங்கள மதிக்கிறவ தான் பொம்பள. நான் பொம்பளைங்கள மதிக்கிறவன்... அண்டர்ஸ் டேண்டு...என அதிரடியாக விஜயசாந்தியிடம் சொல்வார் ரஜினி.
வெள்ளையா இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் அசால்டாக கருப்பு கலரில் வந்து தமிழ்த்திரை உலகில் புது ரத்தம் பாய்ச்சினார். அந்த ஸ்பீடு, அந்த ஸ்டைல்....அவரது விறுவிறுப்பாக பேசும் வசனம் அவரை தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரமாகக் கொண்டு சென்றது.
இது இன்று வரை தொடர்வது தான் தமிழ்த்திரை உலகம் அவருக்கு செலுத்தும் மரியாதை. இதற்கு அவரது கடின உழைப்பு மட்டுமல்ல. கோடிக்கணக்கான அவரது ரசிகர்களும் தான்.
இன்று 72வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்திலும் வேகம் சிறிதும் குறையாமல் படங்களில் நடித்து வருகிறார் என்றால் அதுவே மிகப்பெரிய கொடுப்பினை. அந்த மாஸ் என்ட்ரி...இவருக்கு மட்டும் தான் படத்தில் செட்டாகிறது.
படத்தில் அவரோட வசனம், உச்சரிக்கும் ஸ்டைல், எக்ஸ்பிரஷன், காமெடி சென்ஸ் என இவரது நடிப்புக்கு முத்திரை பதிக்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர் படத்தில் எப்படி நடித்தாலும் அது ஸ்டைலாக மாறிவிடுவது தான் ஆச்சரியமான விஷயம். கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்குறது கிடைக்காது என்பது தான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.
மரணம்...மாஸ_ மரணம்...டப்பு தரணும்...அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்...என்ற பாடல் வரிகளும் அவர் யார் என்பதையும் எப்படிப்பட்டவர் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆறிலிருந்து அறுபது வயது வரை ரசிக்க வைத்து மகிழச் செய்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.