அண்ணாமலையில் தொடை தட்டி வேற லெவலில் வசனம் பேசி கலக்கிய ரஜினிகாந்தின் மாஸ் சீன் படமானது எப்படி?
அண்ணாமலை ஒரு பிளாக் பஸ்டர் மூவி. 1992ல் சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். பாலசந்தரின் தயாரிப்பில் தேவாவின் இன்னிசையில் வெளியான சூப்பர்ஹிட் படம். இந்தப்படத்தில் இருந்து தான் ரஜினிக்கு ஓபனிங் சாங்க் தொடர்ந்தது.
இந்தப்படத்தில் வந்தேன்டா பால்காரன் பாடல் பிக் ஓபனிங் ஹிட்டானது. அதே போல் இந்தப்படத்தில் இருந்து தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்று டைட்டில் கார்டு வித்தியாசமாகப் போடப்பட்டது. அதற்கு தனியாக தீம் மியூசிக்கும் போட்டு பட்டையைக் கிளப்பினார்கள்.
ஜோடி குஷ்பூ. இந்தப்படத்தின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. நண்பர்கள் கூட சில தருணங்களில் டேய் அசோக் இன்னைக்கு உன் வீட்டு காலண்டர்ல குறிச்சி வச்சிக்க என ரஜினி ஸ்டைலில் தங்களுக்கான டயலாக்கை சொருகி பேசி கலகலப்பூட்டுவதைப் பார்க்கலாம்.
அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் நமக்குள் ஒரு ஆவேசமான உணர்வு பீறிட்டு எழும். படத்தைப் பார்த்த சில நிமிடங்கள் நாம் அண்ணாமலையாகவே மாறியிருப்போம். அவ்வளவு அசுரத்தனமான நடிப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நமக்கு கொடுத்திருப்பார். படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த சீன் எப்படி எடுத்தோம் என கூறும்போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அதன் விபரம் இதோ.
தொடையில தட்டி ரஜினிகாந்த் ஆவேசமாக பேசும் டயலாக் அவருக்கே உரித்தான மாஸ். அந்த டயலாக்கை நாம பேசினால் கூட ஒரு வேகம் வரத்தான் செய்யும். அதை சூப்பர்ஸ்டார் பேசும்போது வேற லெவலில் இருக்கிறது. ஒரே ஷாட்ல அந்த சீனை எடுக்கணும்னு ஐடியா பண்ணினோம். கட் ஷாட்டா எடுத்தா அந்த பெர்பார்மன்ஸ காட்ட முடியாது.
அதே நேரம் ராதாரவி, சரத்பாபு, ரஜினி என்று 3 பேரையும் மாறி மாறி காட்ட வேண்டும். வைட் ஆங்கிள்லயும், குளோசப்லயும் சிங்கிள் ஷாட்டாக எடுப்பது கொஞ்சம் சிரமம் தான். கேமராவை அதற்கேற்றவாறு ட்ரை ஆங்கிள் பொசிஷனில் வைக்க வேண்டும். ரஜினி சாரிடம் இதற்காக அரை மணி நேரம் டைம் கேட்டோம். என்ன நடக்குது இங்கேன்னாரு. அப்புறமா விபரம் சொன்னோம். சரி சரி என்றார்.
தொடையில் தட்டி வசனம் பேசும்போது வைட் ஆங்கிளில் எடுத்தோம். அவரது எக்ஸ்பிரஷனைக் காட்டும்போது குளோசப் ஷாட்டில் எடுத்தோம். அதேநேரம் ராதாரவியையும், சரத்பாபுவையும் காட்ட வேண்டும். ஒரு சமயம் சரத்பாபு ஷெட்டிலிருந்து ஓடினார். ஆனால் ரஜினிகாந்த் எந்தவித பதட்டமும் அடையாமல் பெர்பார்மன்ஸ்க்காக கடுமையாக உழைத்து அந்தக் காட்சியை ஒரே டேக்கில் நடித்து அசத்தினார்.
அதன்பிறகு அந்தக்காட்சியும் முடிந்தது என்று சொன்னதும் நாங்கள் தான் கொஞ்சம் ரஜினி நடந்தால் நல்லா இருக்குமே என்றும் ரசிகர்கள் அதைத் தான் எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னோம். உடனே அதற்கும் சம்மதித்து டயலாக் பேசி முடித்ததும் திரும்பி ஒரு நடை நடப்பார் பாருங்க. அந்தக்காட்சிக்கு தியேட்டரில் கைதட்டாத ரசிகனே இல்லை. அவ்ளோ கிளாப்ஸ்.