சிம்ரன் வாழ்க்கையில் வில்லனாக வந்த பிரபலம்!- கனவுக்கன்னியின் காதல் கதை...
90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வந்து பல இரவுகளின் தூக்கத்தைத் தொலைத்தவர் நடிகை சிம்ரன்.
இவரது படங்கள் என்றாலே போதும். ஹீரோவுக்காக இல்லாவிட்டாலும் இவருக்காகவே ரசிகர்கள் படத்தை ஓட வைத்து விடுவார்கள். பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் தான். கமல், பிரபுதேவா, பிரசாந்த், விஜயகாந்த், எஸ்.ஜே.சூர்யா, விஜய், அஜீத், அப்பாஸ் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார்.
இவருடைய நடிப்பில் பூச்சூடவா, நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், அவள் வருவாளா, கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமனா, நியூ, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் மறக்க முடியாதவை. எல்லாமே செம மாஸான படங்கள் தான்.
இவரது கேரியர் எப்படி அவுட்டானது என்பது பற்றிய தகவலைப் பார்க்கும் போது அதிர்ச்சியடைய வைக்கிறது.
இவர் படங்களில் நடித்தால் போதும். அங்கு கிளாமர் நடிகை தேவையில்லை. இவரே கிளாமராகவும், குடும்பப்பாங்கான பெண்ணாகவும் நடித்து விடுவார். அதெப்படி என்கிறீர்களா? கிளாமராக பாடல்காட்சியிலும், மற்ற நேரங்களில் குடும்பப்பாங்கான பெண்ணாகவும் வந்து அசத்துவார்.
நடிப்பிலும் இவர் சூரப்புலி தான். இவருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துக்கும் இடையில் காதல் என்று சொல்லப்பட்டது. ராஜூசுந்தரமும், சிம்ரனும் ஐ லவ் யூ டா என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
அப்போது அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. அவர் எந்த ஹீரோவுடனும் நெருங்கி நடித்துவிட்டால் காதலரால் தாங்கவே முடியாதாம். அப்படி ஒரு சமயத்தில் தான் கமலுடன் சிம்ரன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது லிப் லாக் செய்தாராம்.
உடனே தகவல் தெரிந்த காதலர் இது குறித்து பேசுவதற்காக நள்ளிரவிலே வெளியே அழைத்துச் சென்று தகராறு செய்து நடுரோட்டில் இறக்கி விட்டுள்ளார். சிம்ரன் நடுரோட்டில் தன்னந்தனியாக தவித்ததற்கு கமல்ஹாசன் தான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
அதன்பிறகு ராஜூசுந்தரத்துக்கும், சிம்ரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இருவருடைய பிரிவுக்கும் மறைமுகமாக யார் காரணம் என்றால் உலகநாயகன் தான் என அப்போதைய ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனாலும் சிலர் இதை வதந்தி என்று மறுத்தனர். அவர்கள் ராஜூசுந்தரத்தின் குடும்பத்தினர் சிம்ரனை படம் நடிக்கக்கூடாது என்று சொன்னதாலும், அவருடைய சொத்துகளை ராஜூசுந்தரத்தின் பெயரில் மாற்றச்சொன்னதுமே இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றனர். இதே போல் தான் பிரபுதேவா, நயன்தாரா காதலிலும் நடந்தது என்றும் சொல்கின்றனர்.
கமலும் சிம்ரனும் பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.