நான் அவுத்து போட்டு நடிச்சா உனக்கென்ன?…. நடுரோட்டில் பயில்வான் மானத்தை வாங்கிய நடிகை…

Published on: July 22, 2022
bailwan
---Advertisement---

வித்தியமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் அண்மையில் இயக்கி நடித்த வித்தியாசமான முயற்சி என்றால் அது இரவின் நிழல் திரைப்படம் தான். ஒரே ஷாட்டில், வெவ்வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போல காட்சிப்படுத்தினார்கள்.

இதுதான் உலக சினிமாவில் இப்படி கதை சொன்னது முதல் முறை என பார்த்திபன் விளம்பர படுத்தினார். அதற்கு பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். அதே போல, சில சர்ச்சைகளும் எழுந்தன. அதில் நடித்திருந்த ரேகா நாயர் எனும் நடிகை மார்பு தெரியும் அளவுக்கு அரை நிர்வாணமாக நடித்து இருந்தார்.

அதனை திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு பெரிய தவறாக நினைக்க தோன்றாத அளவுக்கு பார்த்திபன் திறமையாக அதனை படமாக்கி இருந்தார். அந்த காட்சிக்கு பாராட்டு எந்த அளவுக்கு கிடைத்ததோ அதே போல சர்ச்சைகளும் இருந்தது.

இதில் பயில்வான் ரங்கநாதன் தனது இந்த காட்சி பற்றியும், ரேகா நாயர் பற்றியும் காரசாரமான விமர்சனங்களை அவர் பாணியில் கூறிவிட்டார். இதனால், கடுப்பான ரேகா நாயர், அவர் காலையில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை அருகே நடைப்பயிற்சி மேற்கோளாவர்.

இதையும் படியுங்களேன் – மக்களிடம் பிரபலமாக உதயநிதி ஸ்டாலின் மனைவி என்னவெல்லாம் செய்றாங்க பாருங்க…

அந்த சமயம் அவரை மறித்து , ‘நான், அவுத்து போட்டு நடிச்சா உனக்கென்ன, என் இஷ்டம் உன் பொண்ணா நானு? , பொண்டாட்டியா நானு? செருப்பு பிஞ்சிரும், நீ என்ன விளக்கு புடிச்சியா? காண்டம் நான் வச்சிருந்தேனா ? என்ன பேச உனக்கு என்ன தைரியம் இருக்கா ?  ‘ என நடு ரோட்டில் வெளுத்து வாங்கி விட்டார். பதில் கூற முடியாமல் பயில்வான் திக்கி திணறி இருக்கிறார். அதனை பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.