மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்‌ஷன் சொல்வது என்ன?

by Akhilan |
மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்‌ஷன் சொல்வது என்ன?
X

Rakshan

Rakshan: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரச்சனையை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சக ஆங்கராக இருந்த விஜே ரக்‌ஷன் தற்போது இது குறித்து பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

பொதுவாக சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள்தான் ரசிகர்களிடம் பெரிய இடம் பிடிக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். நான்கு சீசன்களை கடந்தது. ஹாட்ஸ்டாரில் ஒரு எபிசோடை தாமதமாக வெளியிட்டால் கூட சண்டைக்கு வந்த நேரம் கூட இருக்கிறது.

இதையும் படிங்க: கோவாவில் பாடகியுடன் மூணு மாசமா இருந்த ஜெயம் ரவி… என்ன காரணம்னு தெரியுதா?

ஆனால் இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். முதலில் மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியேறியது. அதை தொடர்ந்து சக நடுவராக இருந்த வெங்கடேஷ் மட்டும் வெளியேற அவரின் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

இதனால் ஆரம்பத்திலேயே பிரச்சினையுடன் தொடங்கியது குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன். இருந்தும் வித்தியாசமான டாஸ்க் வைத்து ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள புதிய நிறுவனமான பாக்ஸ் ஆபிஸ் பெரும்பாடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதாக அமைந்திருக்கிறது மணிமேகலையின் வெளியேற்றம்.

கடந்த வாரம் பாதி எபிசோடிலேயே மணிமேகலை வெளியேறினார். அந்த இரவே என்னுடைய ஆங்கரிங் குக் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டு வருகிறார். இதற்கு முன் நான் பயணித்த நிறுவனத்தில் பாசிட்டி மட்டுமே இருந்தது. தற்போது இருக்கும் குக் வித் கோமாளியில் நெகட்டிவிட்டி மற்றும் அடிமைத்தனம் அதிகரித்து இருப்பதாக பதிவிட்டார்.

இதையும் படிங்க: ரஜினி படத்துல ஓபனிங் சாங்… கமல் பாடுவதற்கு வாய்ப்பு?

இதை தொடர்ந்து பிரச்சினை வெடித்தது. மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவிற்கு எதிராகவும் ரசிகர்கள் கமெண்ட்டில் வருத்து வந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த கோமாளிகள் ஒவ்வொருவராக பேச தொடங்கி இருக்கின்றனர். அதுபோல அங்கிருந்த சக ஆங்கரான ரக்சன் இது குறித்து பேசி இருக்கிறார்.

பிரியங்கா அக்கா வந்த நாளிலிருந்து மணிமேகலைக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார். நான் அவரின் ஜூனியர் என்பதால் அது குறித்து கேட்டுக் கொள்வேன். ஆனால் மணிமேகலையும் ரொம்ப வருடங்களாக விஜேபியாக இருப்பதால் அதுவே பிரச்சனையாகி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Next Story