பிறந்தநாளில் இப்படி ஒரு அதிர்ச்சியா?...இப்படி பண்ணிட்டியே தாயி....
தமிழில் சில திரைப்படங்களிலும், தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 2 விலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார். மேலும், சில ஹிந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 10ம் தேதியான நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, இன்ஸ்டாகிராமில் தனது காதலனை அவர் ரசிகர்களுக்கு அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
பாலிவுட்டில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வரும் ஜாக்கி பாக்நானியிடம்தான் ப்ரீத் சிங் காதலில் விழுந்துள்ளார். அவருடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு ‘இந்த வருடம் எனக்கு நீதான் சிறந்த பரிசு...என் வாழ்வில் வண்ணம் சேர்த்த உனக்கு நன்றி...என்னை இடைவிடாமல் சிரிக்க வைக்கும் உனக்கு நன்றி... நீ நீயாக இருப்பதற்கும் நன்றி’ என உருகியுள்ளார் அம்மணி..
பொதுவாக நடிகைகள் என்றால் அவர்கள் யாரையும் காதலிக்கக் கூடாது என ரசிகனின் மனம் ஏங்கும். அவர்கள் காதலில் விழுந்துவிட்டாலோ, திருமணம் செய்து கொண்டாலோ இனம் புரியாத ஏக்கமும், ஏமாற்றமும் சில ஜொள்ளு ரசிகர்களுக்கு வரும். ரகுல் ப்ரீத் சிங் தனது காதலனை அறிமுகம் செய்துவிட்டதால் அந்த தரப்பு ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.