சமந்தா நயன்தாராவை எல்லாம் ஓரங்கட்டிய நடிகை.... இந்தாண்டு இவர் தான் டாப்....

தற்போது உள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாவதே ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் ஒரு இளம் நடிகைக்கு அடுத்தடுத்து 7 படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளதாம். அதுவும் இந்த ஆண்டில் மட்டும்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தாவே கைவசம் ஒன்று அல்லது இரண்டு படங்களை தான் வைத்துள்ளார்கள். ஆனால் இந்த நடிகைக்கு எப்படி இவ்வளவு பட வாய்ப்புகள் கிடைத்தது என்று மற்ற நடிகைகள் குழப்பத்திலும் பொறாமையிலும் உள்ளார்களாம்.

rakul preet singh
அந்த நடிகை வேற யாரும் இல்லைங்க தமிழில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் டூயட் பாடிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் தெலுங்கில் தான் பிரபலம். ஆனால் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பாலிவுட்டில் நல்ல மார்க்கெட் உள்ளதாம்.
இந்தாண்டு இவர் நடிப்பில் வெளியாக உள்ள 7 படங்களில் 6 படங்கள் பாலிவுட் படங்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆமாங்க அதுதான் உண்மை. அதன்படி ஆயுஷ்மானுடன் டாக்டர் ஜி, அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுடன் ரன்வே 34, அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் தேங்க் காட் ஆகிய படங்கள் உள்ளன.

rakul preet singh
இது தவிர சத்ரிவாலி, அட்டாக் மற்றும் அக்ஷய் குமாருடன் பெயரிடப்படாத புதிய படம் என அடுத்தடுத்து பாலிவுட் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் தான் நாயகியாக நடித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 7 படங்கள் வெளியாக உள்ளன.
அதுமட்டும் இல்லைங்க சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாக உள்ள இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர் தான் நடிக்கிறாராம். ஒருவேளை அந்த படமும் இந்தாண்டு வெளியானால் ரகுல் நடிப்பில் மொத்தம் 8 படங்கள் வெளியாகும். 2022ஆம் ஆண்டு ரகுலுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது போல.