அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு சினிமா பக்கம் சென்று தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
அதன்பின் 5 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது. அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார்.
அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய வெற்றியை பெறுவதில்லை. தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.
எனவே, தனது கவனத்தை தெலுங்கில் செலுத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.