Categories: latest news

டைரக்டர்களை எப்படி சூஸ் பண்ணனும்னு இவர்கிட்டத்தான் கத்துக்கணும்!.. ஆர்சி 17 இயக்குநர் இவர்தான்!

மகதீரா, ஆர்ஆர்ஆர் என ராஜமெளலியுடன் இரு பிரம்மாண்ட படங்களில் நடித்த ராம்சரண் அடுத்தடுத்து பெரிய பெரிய இயக்குநர்களை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இன்னும் பல ஆண்டுகளுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பேன் என்கிற உறுதியை ஏற்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு இயக்குநர் வேட்டையே ரொம்ப கஷ்டமான விஷயமாக உள்ள நிலையில், தெலுங்கில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் இயக்குநர்களை ராம்சரண் எப்படித்தான் பிடித்துப் போடுகிறார் என்றே தெரியவில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: வீட்ல இப்பவும் சிவாஜிராவ் தான்!.. ரகசியமா பண்ண வேலையை அம்பலப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!..

ராஜமெளலியுடன் ஆர்ஆர்ஆர் படத்தை முடித்த கையோடு ஷங்கர் உடன் இணைந்து கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.

அடுத்ததாக ஆர்சி 16 படத்தின் பூஜையை சமீபத்தில் போட்டிருந்தார் ராம்சரண். உப்பென்னா படத்தை இயக்கி ராம்சரணுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த புச்சி பாபு சனா அந்த படத்தை இயக்குகிறார். ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யா – சுதாகொங்கரா ‘புறநானூறு’ படம் டிராப் ஆனதுக்கு காரணம் இதுதானாம்!.. அடக்கடவுளே!…

இந்நிலையில், ஆர்சி 17 படத்துக்கான இயக்குநரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் ராம்சரண். அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா, புஷ்பா 2 படங்களை இயக்கியுள்ள சுகுமார் தான் ராம்சரணின் 17வது படத்தையும் இயக்கப் போகிறார். 2 குதிரைகள் சிம்பலுடன் ஆர்சி 17 அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

தமிழில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

33 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago