---Advertisement---

என் திமிரு தான்டா என் ஆட்டம்…ராம் சரணின் மிரட்டலான பெடி க்ளிம்ப்ஸ் வெளியீடு

Published on: March 27, 2026
peddi movie
---Advertisement---

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் ராம் சரண். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் பெடி பஹில்வான். உப்பெனா சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய புச்சி பாபு இந்த படத்தை கிராமப்புற பின்னணியில் ஒரு அழுத்தமான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக எடுத்துள்ளார். ஆர். ரத்னவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ர்குமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இரண்டு பாடல்கள் யூடியூபில் வெளிவந்து பட்ட்டையாஇ கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ராம் சரணின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்களுக்காக படக்குழு பேடி படத்தின் கிளிம்பஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த 45 வினாடி வீடியோவில், ராம் சரண் இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு மிகவும் மிரட்டலான கிராமத்து மல்யுத்த வீரராகத் தோன்றுகிறார். இப்படத்திற்காக அவரது உழைப்பு இந்த வீடியோவில் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. கனமான சாக்குகளைத் தூக்கி வீசுவது, கொட்டும் மழையில் மல்யுத்தப் பயிற்சி செய்வது, மற்றும் அனுமனைப் போலப் பிரம்மாண்டமான கதாயுதத்தை ஏந்தி நிற்பது போன்ற காட்சிகள் ரசிகர்களுக்கு படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என்பது உண்மை.

மல்யுத்தம் என்பது கிரிக்கெட் போல பந்தையும் பேட்டையும் எதிர்கொள்ளும் விளையாட்டு அல்ல… நேரடியாக மரணத்தையே எதிர்கொள்ளும் விளையாட்டு” என்று கூறுவதாகட்டும், களத்தில் இறங்கும் ராம் சரண் தனது மீசையை முறுக்கியபடி, “என் திமிரு தான்டா என் ஆட்டம்” என்று கூறும் வசனம் மாஸ் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து ஷர்மா, சத்யா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.வருகிற ஏப்ரல் 30ம் தேதி இபடம் வெளியாக உள்ளது