தெலுங்குத் திரையுலகின் முன்னணி ஹீரோ ராம் சரண் மற்றும் உப்பென்னா சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் புச்சி பாபு சனா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பெடி’ . மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் மற்றும் ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ரத்னவேலு. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையைக் குறிவைத்து இந்தப் படம் களமிறங்கிறது.





