இராம நாராயணன் உருவாக்கிய புது டிரெண்ட்… இப்போதும் நடைமுறையில் இருக்கும் பழக்கம்…
தமிழ் சினிமாவில் மிருகங்களை வைத்து நேர்த்தியாக படமாக்கும் வல்லமையை பெற்றிருந்த இயக்குனராக திகழ்ந்தவர் இராம நாராயணன். அதே போல் “பாளையத்து அம்மன்”, “கோட்டை மாரியம்மன்” போன்ற சாமி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் “சிவப்பு மல்லி”, “சூரக்கோட்டை சிங்கக்குட்டி”, “கரிமேடு கருவாயன்”, “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” போன்ற பிரபலமான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
யானை, பாம்பு, நாய் போன்ற மிருகங்களை வைத்து படமாக்குவதில் சிறப்பான இயக்குனராக திகழ்ந்த இராம நாராயணன், கிட்டத்தட்ட 8 திரைப்படங்களை தனது சொந்த பேன்னரின் மூலம் தயாரித்துள்ளார்.
இராம நாராயணன் தொடங்கிவைத்த பழக்கம்
இவ்வாறு பல பெருமைகளை கொண்ட இயக்குனரான இராம நாராயணன், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழக்கத்தை தொடங்கியிருக்கிறார். அந்த பழக்கம் இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
இராம நாராயணன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த காலகட்டத்தில், அவரது படப்பிடிப்பில் மதிய உணவு இடைவேளைகளில், திரைப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கடலை மிட்டாய் கொடுப்பாராம். நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் என அனைவரும் மதிய உணவு முடித்த பிறகு கடலை மிட்டாய் சாப்பிடுவார்களாம். இப்போது வரை அந்த பழக்கம் சினிமாத் துறையில் இருக்கிறதாம். இதனை முதலில் தொடங்கியவர் இராம நாராயணன்தான் என கூறப்படுகிறது.