Connect with us
ramarajan

Cinema History

அவர் மியூசிக் போட்டா நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த ராமராஜன்!.. நடந்தது இதுதான்!..

தமிழ் சினிமாவில் கிராமத்து நாயகனாக வலம் வந்தவர் ராமராஜன். உதவி இயக்குனராக பல படங்களில் வேலை பார்த்து அதன்பின் ஹீரோவாக மாறினார். ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்கிற படம் மூலம் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

ramarajan

அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒருகட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் வெற்றி அப்போதையை நடிகர்களையே ஆச்சர்யபடுத்தியதோடு, ராமராஜனை பார்த்து பயப்படவும் செய்தது. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். பி அண்ட் சி செண்டரில் இவரின் படங்கள் வசூலை குவித்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் இசை.

இதையும் படிங்க: ராமராஜன் நடிக்கும் புதிய படம்.. செம டைட்டில்.. அவங்கதான் ஹீரோயினாம்!….

ராமராஜனின் படங்களில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. எனவே, தனது எல்லா படங்களிலும் இளையராஜாவே இசையமைக்க வேண்டும் என்பதில் ராமராஜன் உறுதியாக இருந்தார். ஆனால், அவரின் மார்க்கெட் கொஞ்சம் இறங்கியிருந்த நேரத்தில் தேவா போன்ற புதிய இசையமைப்பாளர் வந்துவிட்டனர்.

deva

deva

ராமராஜன் நடிப்பில் உருவான ‘மனசுக்கேத்த மகராசா’ என்கிற படத்தில் தேவாதான் இசை என தயாரிப்பாளர் முடிவெடுத்துவிட்டார். ஆனால், இதற்கு ராமராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஏனெனில், அப்போது தேவா பெரிதாக பிரபலமாகவில்லை. அவரும் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தார். ‘யார் தேவா?’ என ராமராஜன் கேட்க அவர் நிறைய பக்தி பாடல்களுக்கு இசையமைத்தவர் என சொல்ல ராமராஜன் மேலும் கடுப்பானார். ‘பக்தி பாடல்களை போடுபவர் எல்லாம் என் படத்துக்கு இசையமைப்பதா? வேண்டவே வேண்டாம்’ என மறுத்துவிட்டார். ஆனால், தேவாவிடம் மெட்டுக்கள் வாங்கி பாடல்களை பதிவு செய்து ராமராஜனிடம் போட்டு காட்ட அவருக்கும் அது பிடித்திருந்தது. அதன்பின் ராமராஜனின் சில படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

இந்த படத்திற்கு பின்னர் தேவா ‘வைகாசி பொறந்தாச்சி’ படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் வரை இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்த நளினி!.. மகன்தான் காரணமாம்… வினோதமா இருக்கே…

google news
Continue Reading

More in Cinema History

To Top