ரஜினி நடிச்சிருந்தா சரி வராது! விஜயகாந்துதுதான் கரெக்ட் மேச்.. என்ன படம் தெரியுமா?..
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்களை வென்ற கதாநாயகர்கள் ஒரு சிலரே இருப்பார்கள். ரஜினி, கமல், சிவாஜி போன்றோர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் மக்கள் மானசீகமாக நேசித்த கலைஞர்கள் ஒரு சிலர் பேர் மட்டுமே. அந்த வகையில் எம்ஜிஆர் மற்றும் அவருக்கு அடுத்த படியாக கேப்டன் விஜயகாந்த்.
இருவரின் இறப்பிற்கும் ஒட்டுமொத்த தமிழ் நாடே சோகத்தில் ஆழ்ந்தது. அதுவும் விஜயகாந்தின் மறைவிற்கு பிறகு அவரை பற்றி தெரியாதவர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். பல ஊடகங்கள், பத்திரிக்கைகள் என விஜயகாந்தை பற்றி செய்திகளை புரட்ட ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: என்கிட்டையே திமிரா நடந்துக்கலாமா? சீண்டிய தயாரிப்பாளரை கடனாளியாக்கிய கமல்ஹாசன்…
இப்படி ஒரு மனுஷனை விட்டு விட்டோமே என்றெல்லாம் கதறி அழுதனர். அந்தளவுக்கு மாபெரும் ஒரு மனிதனாக கலைஞனாக வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த். ஒரு காலத்தில் ரஜினிக்கு செக்யூரிட்டியாக இருந்தவர் விஜயகாந்த். அதன் பின் படிப்படியாக வளர்ந்து கடைசியில் அந்த ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக உச்சம் பெற்றார்.
இந்த நிலையில் ரஜினி நடிக்க வேண்டிய பல படங்கள் விஜயகாந்தை தேடி சென்றிருக்கிறது. அதே போல் விஜயகாந்த் நடிக்க வேண்டிய படங்கள் ரஜினியை தேடி சென்றிருக்கிறது. அப்படித்தான் ரமணா திரைப்படமும்.
இதையும் படிங்க: பயப்படலைனாலும் பயந்த மாதிரி காட்டிக்கோ!… மீண்டும் டீம் ஏவுடன் இணைந்த மாயா!… இதெல்லாம் ஓவர் மக்கா
முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம்தான் ரமணா. லஞ்சம் , ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். ஒரு சாதாரண கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் விஜயகாந்த் இந்தப் படத்தில் எப்போதும் உள்ள மானரிசத்தில் இருந்து சற்று வித்தியாசமாக நடித்திருப்பார்.
இதை பற்றி பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு கூறுகையில் ‘முதலில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க வேண்டியதாம். ஆனால் ரஜினி நடித்திருந்தால் கண்டிப்பாக அவரின் ஹீரோயிசம்தான் வெளிப்படும். எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அதற்கு விஜயகாந்த் தான் பொறுத்தமாக இருப்பார்’ என எம்.எஸ்.பிரபு சொல்லி விஜயகாந்த் இந்த கதைக்குள் வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்!. இன்ஸ்டாகிராமில் வெளியான அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்லூரி மாணவர்களையும் கூட்டுவது என்பது எளிதல்ல. ஆனால் அப்படியும் காட்ட வேண்டும். அதை எப்படி காட்டினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? என்பதை அறிந்து அதற்கு விஜயகாந்த் மாதிரியான ஒரு ஆள் சொன்னால்தான் கேட்பார்கள் என்று நினைத்து இந்தப் படத்தை எடுத்தார்களாம்.