Cinema News
34 வருஷமா முறியடிக்க முடியாத சாதனை!.. ராமராஜன் – இளையராஜா காம்போ இப்போ எடுபடுமா?..
நீண்ட நாள்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா ராமராஜன் உடன் கைகோர்த்துள்ளார். தற்போது ராமராஜன் நடித்த சாமானியன் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ராமராஜனுக்கு மக்கள் நாயகன் என்று ஒரு பெயர் உண்டு. அவரு படங்கள்ல அவரு மது, சிகரெட் குடிக்க மாட்டார். எம்ஜிஆர் மாதிரி அவர் சில கொள்கைகளை வைத்து இருந்தார். இதுவரை அவர் வில்லனாகவே நடித்ததில்லை. எவ்வளவோ பெரிய கம்பெனிகள் எனக்குப் படம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்ட போதும், சின்ன சின்ன கம்பெனிகளைக் கைதூக்கி விட்டவர்.
கரகாட்டக்காரன் வந்து 34 வருடம் ஆகிவிட்டது. இந்தப் படத்தோட ரிக்கார்டை இதுவரை எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை. குணச்சித்திரம், வில்லன் வேடங்களில் கேட்டபோதும் அவர் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்தப் பாடலில் ஒரு தகப்பன் மகனைக் கொண்டாடும் விதத்தில் இளையராஜா பாடியுள்ளார்.
இந்தப் பாடலை அவரே எழுதியுள்ளார் என்பது தான் விசேஷம். இந்தப் பாடல் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 83 வயதில் பலரும் வீட்டில் படுத்து தூங்கும் இந்தக் காலகட்டத்தில் 35 வயது இளைஞன் தன் மகளைக் கொஞ்சுவதைப் போன்ற அதே அன்பில் பாடியுள்ளார் என்பது தான் விசேஷம்.
தத்திவா தத்திவா என்ற இந்தப் பாடலை அவ்வளவு அருமையாகப் பாடியுள்ளார் இளையராஜா. அன்பிருக்கும் இடத்தில் தெய்வம் விளையாடும் மகளே மகளே மகளே என்று கொஞ்சுவது போல பாடல் வரிகளை எழுதியுள்ளார் இசைஞானி.
தெய்வம் உள்ள இடத்தில் துன்பம் இருந்தாலும் இனிதாய் வாழ்வில் விளையாடு என்றும் எழுதியுள்ளார். ஊரு என உழைத்திருந்தேன். ஆனா இப்போ உனக்காக என் வாழ்க்கை உயிரைத் தர துணிந்தேன். வாழ்க்கையில உயரு மகளே என சொல்லி இந்தப் பாட்டை ரொம்ப அழகாகப் பாடியுள்ளார் இளையராஜா.
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு உள்ள டிரெண்டு வேற. இப்ப உள்ள காலகட்டத்துக்கு இந்தப் படம் எடுபடுமா இல்லையான்னு தெரியாது. ஒரு முறை பாக்யராஜ்கிட்ட சினிமாவைப் பற்றித் தீர்மானிக்க முடியுமான்னு கேட்டபோது எதைப் பற்றி வேணாலும் தீர்மானிக்கலாம். இந்தப் படம் ஓடுமா, ஓடாதான்னு யாராலயும் தீர்மானிக்க முடியாதுன்னு சொன்னார்.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளரும், யூடியூபருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.