ராமராஜன் செய்த அதிரடி காரியம்… சினிமா கேரியரே போச்சு!! இதுதான் காரணமோ??
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். 1980களில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் டாப் நடிகர்களாக கோலோச்சிக்கொண்டிருந்த வேளையில் தனக்கான தனி டிராக்கை உருவாக்கி மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தவர் இவர்.
ராமராஜன் திரைப்படங்களின் வெற்றிகளை பார்த்து ரஜினி, கமல் ஆகியோருக்கு வயிற்றில் புளியை கரைத்தது என்று கூட பலர் கூறுவார்கள். அந்த அளவுக்கு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார்.
குறிப்பாக கிராமத்தை மையமாக வைத்து பல திரைப்படங்களில் நடித்தார் ராமராஜன். ஆதலால் மக்களிடையே கிராமத்து நாயகன் என பெயர் பெற்றார். ராமராஜன் நடித்த எண்ணற்ற திரைப்படங்கள் வெற்றிப்பெற்றிருந்தாலும் “கரகாட்டக்காரன்” திரைப்படம் காலம் தாண்டியும் பேசப்படும் வகையில் மாபெரும் வெற்றிப்பெற்றது.
ராமராஜன் கடைசியாக 2012 ஆம் ஆண்டு “மேதை” என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார். குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களுக்கான வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலுமே ‘நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என கூறி அந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து வந்தாராம்.
எனினும் தற்போது ராமராஜன் “சாமானியன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் ராமராஜன் கதாநாயகராக கம்பேக் தருகிறார் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ராமராஜன் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதை நாம் அறிவோம். ராமராஜன்-நளினி திருமணத்தில் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தனாகவே இருந்தார். அதனை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் ராமராஜன்.
ராமராஜன் திரைப்படங்கள் மாபெரும் வெற்றித்திரைப்படங்களாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இருந்து ராமராஜன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டாராம். அந்த வேளையில்தான் ராமராஜன் நடித்த “ஊரு விட்டு ஊரு வந்து” என்ற திரைப்படம் வெளியானதாம்.
முதல் மூன்று நாட்கள் அத்திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த வேளையில், ராமராஜன் அதிமுகவில் இருந்து விலகிய செய்தி வந்தவுடன் அத்திரைப்படத்தின் வசூல் சரிவை காண்டதாம்.
இத்தகவலை பிரபல சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். மேலும் பேசிய அவர் “இந்த சம்பவத்தில் இருந்து, அதிமுக தொண்டர்களாலும் ரசிகர்களாலும்தான் ராமராஜன் திரைப்படங்களுக்கு அதிக வசூல் வந்துக்கொண்டிருந்தது எனவும் அதுதான் உண்மை எனவும் ஆகிப்போய்விட்டது. அதிமுகவில் இருந்து விலகிய ராமராஜனுக்கு மரியாதை குறைந்து போய் விட்டது. அதன் பிறகு வெளிவந்த ராமராஜன் திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்த வசூலை பெறவில்லை. அதன் பின் பல நாட்கள் கழித்து தனது தவறை உணர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராமராஜன்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.