மீண்டும் மீண்டுமா!. கடுப்பான ராமராஜன்.. கரகாட்டக்காரன் கிளைமேக்ஸில் நடந்தது இதுதான்!..

by சிவா |
ramarajan
X

ramarajan

மக்கள் நாயகனாக, பசு நேசனாக கிராமத்து கதைகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதோடு, ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர் ராமராஜன். ஒருகாலத்தில் இவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருந்தது. இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றனர். இவரின் படங்களுக்கு பெரிய பலமாக இளையராஜாவின் பாடல்கள் இருந்தது.

ramarajan

பல வருடங்கள் மார்க்கெட்டின் பீக்கில் இருந்த ராமராஜன் தோல்விப்படங்களை கொடுத்து மார்க்கெட்டை இழந்தார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே கறார் கட்டி வந்த வாய்ப்புகள் எல்லாவற்றையும் ஒதுக்கினார். பல வருடங்களுக்கு பின் இப்போது சாமானியன் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Ramarajan

Ramarajan

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படத்திற்கு இளையராஜா ரம்மியமான பாடல்களை அமைத்து கொடுத்தார். மேலும், கவுண்டமணி, செந்தில் காமெடி இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. எனவே, பல ஊர்களிலும் இப்படம் 100 நாட்கள் ஓடியது. சேலத்தில் ஒரு திரையரங்கில் இப்படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

ramarajan

இப்படத்தில் கரகாட்ட கலைஞராக ராமராஜனும், கனகாவும் நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் ராமராஜன் தலையில் கரகம் வைத்து நடித்திருந்தார். தலையில் கரகம் வைத்தவாறே ஒரு சண்டையும் செய்திருப்பார். இப்படத்தில் இறுதியில் ஒரு பாடல் காட்சி வரும். அம்மன் முன்பு ராமராஜனும், கனகாவும் தங்களை நிரூபிக்க தீயில் இறங்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த காட்சியை ராமராஜனிடம் கங்கை அமரன் சொன்ன போது ‘இப்படத்தில் கரகம் வைத்தவாறு பல காட்சிகளில் நடித்துவிட்டேன். தலையே பாரமாக இருக்கிறது. மீண்டும் என்னால் கரகத்தை தலையில் வைத்து நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டாராம். எனவே, அப்பாடலின் இறுதியில் மட்டும் கரகம் வைத்து தீயில் நடந்து வருவது போல காட்சியை எடுத்து படத்தை முடித்துவிட்டனராம்.

இதையும் படிங்க: கமல்ஹாசனை பிழிந்தெடுத்த கோவை சரளா!… ஒரு லெஜண்டுன்னு கூட பார்க்காம இப்படியா?

Next Story