Connect with us
ramarajan 1

Cinema History

தியேட்டரில் டிக்கெட் கிழித்த குமரேஷன் முதல் ராமராஜன் எம்.பி. வரை!.. சாமானியனின் சாதனை!..

ரஜினி, கமல், அஜீத், விஜய் எவ்வளவு ஹிட் கொடுத்திருந்தாலும், இவர்கள் யாராலேயும் தகர்த்து எரிய முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ராமராஜன் இன்று வரை.  “கரகாட்டக்காரன்” திரைப்படம் தமிழ் சினிமாவில் படைத்த சாதனையை தற்பொழுதுவரை. எந்த படத்தாலும் உடைத்து ஏறியமுடியவில்லை

இயக்குனர் ஆக வேண்டும் என்கின்ற ஆசையை தனக்குள்ளேயே வைத்திருந்தார் ராமராஜன். படங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக பார்க்கவேண்டும் என்பதற்காக திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தவர் இவர். அவ்வளவு மோகம்  சினிமா மீது இவருக்கு.

ramarajan1

ramarajan1

எதிர்பார்த்தது போல கிடைத்தது வாய்ப்பு இயக்குனராக அல்ல, நடிகனாக.  வந்த படங்கள் எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட்.  “நீங்க வேறலெவெல்” என பலர் சொல்லும் அளவிலான ஒரு இடத்தை பிடித்தார்.  “எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்தில் டிரௌசர், ஒரு தலைப்பாகை  இதுவே இவரின் உடை படம் முழுவதும். படம் எதிர்பார்த்ததுபோல் ஹிட்.

பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் இவர் இருக்கும் இடம் நோக்கி படை எடுக்கத்துவங்கினர்.  எந்த நிலையை அடைந்தாலும், வந்த நிலையை மறக்காத ராமாராஜனோ ஆரம்ப காலத்தில் தனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கே  முன்னுரிமை கொடுத்துவந்தார். இப்படி ஒருபுறம் இவரது சினிமா கேரியர் சென்று கொண்டிருக்க காதல், காதலித்த பெண்ணுடனே அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில்  திருமணம் என நினைத்தது நடந்த வசந்த காலத்தில் இருந்து வந்தார் ராமராஜன்.

ramarajan 3

ramarajan 3

பின்னர் துவங்கியது இவருக்கு போதாத நேரம், திருமண வாழ்க்கையில் முறிவு, படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, தனது சொத்துக்களையெல்லாம் விற்க வேண்டிய கட்டாயம். உதவிக்கரம் நீட்டிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அதனால் அரசியலில் வளர்ச்சி.

இப்படி ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த ராமராஜன், இளையராஜா இசையமைப்பில் நடித்துள்ள படம் “சாமானியன்”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படம் குறித்த விழா ஒன்றிற்கு அலைகடலென அணிவகுத்தனர் அவரின் ரசிகர்கள்.

திரையரங்கத்தில் டிக்கெட் கிழித்து கொடுத்து, சில காலம் தமிழ் திரை உலகத்தை ஆண்ட ராஜாவாக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் என அரசியலில் முன்னேற்றம் கண்ட ராமராஜனின் திரை வாழ்க்கை எப்படி அமைய போகிறது என்பதுவே இப்பொழுது கோலிவுட்டில் பேசும் பொருளாகி வருகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top