விவகாரத்து ஆகும்னு தெரிந்தே திருமணம் செய்த ராமராஜன்!. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!..
தமிழ் திரையுலையில் ரஜினி கமலுக்கு இணையாக போட்டி போட்டவர் என்றால் அது ராமரஜந்தான். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது. கிராமத்து கதைகளில் நடித்து கிராமத்து மனிதர்களையும் ரசிகர்களாக பெற்ற்றவர். கரகாட்டகாரன் திரைபப்டம் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர். திரைப்பட நடிகர் மட்டுமின்றி அரசியலிலும் பங்கு வகித்தார் .
இவர் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் திரைப்பட நடிகை நளினியை 1987 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண் என்கிற மகனும் அருணா என்கிற மகளும் உள்ளனர்.
இவர்களின் திருமணம் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த திடீரென இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். ராமராஜன் ஜோசியத்தின் மீது அதிக அளவு நம்பிக்கை கொண்டிருப்பவர். ராமராஜன் படங்கள் சரியாக ஓடாத நேரம் அது. அப்போது ‘உன் மனைவியை நீ பிரிந்து வாழ்ந்தால் சினிமாவில் மீண்டும் பெரிய இடத்திற்கு போவீர்கள்’ என ஒரு ஜோதிடர் கூற, இதை நளினியிடம் கூறி அவரின் சம்மதம் பெற்றே விவாகரத்து பெற்றார் ராமராஜன்.
இதைவிட ஆச்சர்யம் என்னவெனில் திருமணத்திற்கு முன்பு நளினியிடம் ‘நமக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தால் நாம் இருவரும் சேர்ந்து வாழாமல் பிரிந்து விடுவோம்’ என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார். அதற்கு நளினி அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று கூறி, குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், ராமராஜன் கணித்தபடியே இருவரும் பிரிந்துவிட்டனர். அதேநேரம், இதுவரை அவர்கள் இருவரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கில்மா உடையில் குளிக்கும் கீர்த்தி சுரேஷ்… பாத்து பாத்து சூடாகும் புள்ளிங்கோ..