திடீரென ஏற்பட்ட கார் விபத்து... மனைவியுடன் விவாகரத்து!.. போராடி மீண்டு வந்த ராமராஜன்!...

by Sankar |
ramarajan
X

"சாமானியன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடுத்த ரவுண்டு வர காத்திருக்கிறார் ராமராஜன். 'கிராமத்து நாயகன்' என ரசிகர்களால் வாய் நிறைய அன்போடு அழைக்கப்படுபவர் அவர். ரஜினி, கமலுக்கு சிம்மசொப்பனமாக அந்த காலத்தில் இருந்ததும் இவரே.

நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிவிழா, ஒவ்வொரு படத்தையும் இரண்டு, மூன்று முறை பார்க்கும் ரசிகர்கள், இதை எல்லாம் தாண்டி இவர் படங்களில் வரும் பாடல்கள் இவரை ஒலி வடிவாமாக கூட சிந்திக்க வைத்தது.

ramarajan3

ramarajan3

குடும்ப வாழ்வில் பிரச்சனை, கோர விபத்து இப்படி தொடர் துயரம் என்கிற கட்டத்தை தாண்டி மீண்டு வந்தவர் இவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பாலும், அவர் மீது கொண்ட பக்தியாலும் அரசியலில் எம்.ஜி.ஆர் வழியில் பயணிக்க நினைத்தவர்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவின் அன்பை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் வரை தனது கடின உழைப்பாலும், மக்கள் இவர் மீது வைத்திருந்த அன்பைக்கொண்டும் தன்னை உயர்த்தி கொண்டவர். அரசியலிலும் தனது பழைய நிலையை தற்போது இழந்து வாழ்ந்து வருகிறார். இப்படி உள்ள நிலையில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள "சாமானியன்" படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இப்பொழுதே எகிறத்துவங்கியுள்ளது.

அந்த நாட்களில் இவரது படங்களில் அணிந்த உடைகள் கூட இவருக்கு பெயரையும், விமர்சனங்களை சமமாக பெற்றுத்தந்தது. அரசியலில் கலக்கி வந்த நேரத்தில் கூட இவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டையை குறிப்பிட்டு ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

நளினியை திருமணம் செய்து கொண்ட ராமராஜன் சில வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். அதற்கு ஜோசியமே காரணம் என சொல்லப்பட்டது. அது உண்மையா என்பது தெரியவில்லை. சினிமாவில் நடிக்கவில்லை, மதுரையில் இருந்த தியேட்டரை விற்றார்.. திடீரென ஏற்பட்ட கார் விபத்து.. மனைவியுடன் விவாகரத்து என நொடிந்து போனார் ராமராஜன். ஆனாலும், அரசியல் நடவடிக்கைகளால் தன்னை பிசியாக வைத்துகொண்டார்/

Ramarajan1

Ramarajan1

இவரின் "கரகாட்டகாரன்" படம் நிகழ்த்திய சாதனையை இன்று வரை தகர்க்க முடியாமல் பல படங்கள் பின்னாலே நிற்கின்றன. இப்படி இருக்கையில் "சாமானியன்" படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றால், இவருக்கு வாய்ப்புகள் மீண்டும் வரத்தொடங்கினால் அந்த காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்தது போல அஜீத், விஜய்க்கு கடும் போட்டியாளராக மாறி விடுவார் என இவரது ரசிகர்கள் இப்பொழுதேபேசி வருகின்றனர்.

Next Story