முகமெல்லாம் பளபளப்பு!.. ராமராஜனின் மேக்கப்பிற்கு பின்னனியில் இருக்கும் ரகசியம் இதுதான்!.,..
தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ராமராஜன். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன் எம்ஜிஆரின் படங்களை பார்த்து பார்த்து சினிமாவிற்குள்நுழைந்திருக்கிறார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக தான் பணிபுரிந்திருக்கிறார்.
இயக்குனர் ராம நாராயணனிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அதன் பின் சிறு சிறு வேடங்களில் நடித்து ரஜினிக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஒரு காலத்தில் ரஜினியே பயந்த சமயம் எல்லாம் நடந்திருக்கிறது.
இவர் உதவி இயக்குனராக இருக்கும் போதே நடிகை நளினி மிகவும் பீக்கில் இருந்த நடிகையாகத்தான் இருந்திருக்கிறார். ராமராஜனுக்கு ஒருதலைக் காதலாக தான் முதலில் இருந்ததாம். அதன் பின் நளினியிடம் சொல்ல நளினி வீட்டில் வந்து பெண் கேளுங்கள் என்று சொன்னாராம்.
ராமராஜனும் நளினி வீட்டிற்கு வந்து பெண் கேட்க நளினியின் குடும்பத்தால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் ராமராஜன். இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த நளினிக்கு அப்போது தான் ராமராஜன் மீது அலாதி அன்பு வந்து தீவிர காதலாக மாறியிருக்கிறது.
அதன் பின் இருவரும் பெற்றோரை எதிர்த்து எம்ஜிஆர் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பிக்கு அழகான இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அதன் பின் படங்கள், அரசியல் என ராமராஜனின் எண்ணங்கள் போக நளினிக்கும் ராமராஜனுக்கும் இடையே விரிசல் வர
தொடங்கியிருக்கிறது.
ஆனால் இருவருக்கும் இடையில் எந்தவிதமான ஒரு அன்பு இருந்தது என்பதை மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். ராமராஜனின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘கரகாட்டக்காரன்’. இந்தப் படத்தில் ராமராஜனின் மேக்கப் தான் ஹைலைட்டே.
இதையும் படிங்க : ரஜினி படத்துக்காக லோகேஷை கைக்குள் போட்டுக்கொண்ட விஜய் பட தயாரிப்பாளர்!… குறுக்க இந்த சன் பிக்சர்ஸ் வந்தா?
அதாவது அந்தப் படத்தில் ராமராஜனின் முகமெல்லாம் ஜிகுனா, ஜிமிக்கி என பளபள என்று இருக்கும். அந்த ஜிகுனா, ஜிமிக்கியை நளினியின் சேலையில் இருந்து எடுத்து ராமராஜனின் உடையில் முந்தைய நாளே தைத்துக் கொள்வாராம். மேலும் முகத்திலும் ஒட்டிக் கொள்வாராம். அந்த அளவுக்கு நளினி மீது காதல் கொண்டிருந்திருக்கிறார் ராமராஜன். இந்த சுவாரஸ்ய தகவலை செய்யாறு பாலு கூறினார்.