ராமராஜன் நடிப்பை விட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்… இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா?

Ramarajan
1980களில் ரஜினி, கமல் ஆகியோர் டாப் நடிகர்களாக வலம் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் தனி டிராக் போட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். “கரகாட்டக்காரன்”, “வில்லுப்பாட்டுக்காரன்” என பல கிராமத்து திரைப்படங்களில் நடித்த ராமராஜன், கிராமத்து நாயகன் என்றே அழைக்கப்பட்டார்.

Ramarajan
இவர் 1987 ஆம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
ராமராஜன் மிகப் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1998 ஆம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் இருந்து லோக் சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராமராஜன் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்ததினாலேயே அவரது மார்க்கெட் சரிந்தது என பலரும் கூறுவார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ராமராஜன் குறித்த ஒரு அரிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Jayalalithaa
அதாவது ராமராஜன் ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. காரை ஓட்டிய டிரைவர் அந்த விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டாராம். ராமராஜன் சுய நினைவே இல்லாமல் இருந்தாராம்.
அதன் பின் ராமராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போதைய அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் ராமராஜனை கவனித்துக்கொள்ளச் சொன்னாராம். மேலும் ராமராஜன் இனிமேல் நடிக்க வேண்டாம் எனவும், என்ன தேவையோ அதை தான் பார்த்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா கூறினாராம்.

Ramarajan
எனினும் தற்போது ராமராஜன் பல ஆண்டுகள் கழித்து, “சாமானியன்” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.