கரகாட்டக்காரன் படத்துல தவில் கேரக்டர்ல முதல்ல நடிக்க இருந்தது இவரா? அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?
தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத படம் கரகாட்டக்காரன். ராமராஜன் திரையுலக வாழ்வில் இது ஒரு மைல் கல். 1 வருடத்தைத் தாண்டி கரகாட்டக்காரன் படத்தைப் பற்றியும் அதில் பிரமாதமாக கவுண்டமணி நடித்த தவில் கேரக்டர் பற்றியும் நடிகர் ராமராஜன் இப்படி சொல்கிறார்.
கங்கை அமரன் சாதாரணமாக எடுத்த படம் தான். கஷ்டப்பட்டு எல்லாம் பண்ணல. கவுண்டமணி, செந்தில்னு எல்லாரும் சாதாரணமா தான் நினைச்சிக்கிட்டு இருந்தோம். அந்தப் படத்துல தவில் கேரக்டர் கவுண்டமணி கிடையாது. எஸ்.எஸ்.சந்திரன். அவரு அரசியல் பேசும்போது நான் பேசல. எல்லாரும் 'இந்தப் படத்துல தவிலுக்கு எஸ்.எஸ்.சந்திரனைத் தான் போடணும்'னு சொன்னாங்க. நான் தான் 'வேண்டாம்'னு சொன்னேன். இது கிராமிய படம். அரசியல் பேசுவாருன்னு சொன்னேன். முடியவே முடியாதுன்னு கங்கை அமரன் உள்பட எல்லாருமே சொல்லிட்டாங்க.
இதையும் படிங்க... மலைக்கூட மோத தயாராகும் பிரதீப் ரங்கநாதன்… தேவையா இதெல்லாம்… தப்பிச்சிடுவாரா?
அப்புறம் 'அவரு நடிச்சா என்னை விட்டுருங்க'ன்னு சொல்லிட்டேன். 'நான் படம் பண்ணல'ன்னு சொன்னேன். 'வாழைப்பழ காமெடி', 'சொப்பன சுந்தரி காமெடி' எல்லாம் நல்லா ரீச்சாகி விட்டது. எனக்கு அப்பவே தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் கரகாட்டக்காரன். இளையராஜாவின் இசையில் படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். 'மாங்குயிலே, பூங்குயிலே', 'முந்தி முந்தி விநாயகனே' பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க... விடாமுயற்சிக்கு பிறந்தது விடிவுகாலம்.. டபுள் ட்ரீட் வைத்த அஜித்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..
இந்தப் படத்தில் எஸ்எஸ்.சந்திரன் நடிக்க ராமராஜன் எதிர்ப்பு தெரிவித்ததற்கு காரணம் அரசியல் தான். அப்போது ராமராஜன் அதிமுகவின் ஆதரவாளராக இருந்தார். எஸ்எஸ்.சந்திரன் திமுகவின் ஆதரவு பேச்சாளராக இருந்தார். எதிரெதிர் துருவங்கள் என்றால் முட்டல் மோதல் இருக்கும் அல்லவா. அதனால் தான் எஸ்.எஸ்.சந்திரனை வேணவே வேணாம்னு ராமராஜன் நிராகரித்துள்ளார் என்றும் தெரிகிறது.