எவனுக்கும் நான் இப்படி செஞ்சதில்ல.. ராமராஜனிடம் சொன்ன இசைஞானி இளையராஜா!..

by சிவா |
ramarajan
X

90களில் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி மக்கள் நாயகனாகவும் மாறியவர் ராமராஜன். மற்ற நடிகர்களை போல அழகு இல்லை. விஜயகாந்த், அர்ஜூன் போல சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. நடனமாடவும் தெரியாது. சிவாஜி, கமல் போல செண்டிமெண்ட் காட்சிகளில் உருகி நடிக்கவும் தெரியாது.

ஆனாலும், நம்பர் ஒன் நடிகனாக ராமராஜன் மாறியது ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எல்லா நடிகர்களும் நகரத்து கதைகளில் நடிக்க ஆர்வம் காட்ட கிராமிய கதைகளுக்கு சினிமாவில் இருந்த வெற்றிடத்தை பிடித்துக்கொண்டார் ராமராஜன். இவர் நடித்ததில் 90 சதவீத படங்கள் கிராமம் சார்ந்த கதைகள்தான்.

இதையும் படிங்க: கவுண்டமணி எப்பவுமே அப்படித்தான்!.. ஒன்னு நடக்காம போச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் ராமராஜன்..

இவரின் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள்தான். அதுவும் அவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் சில திரையரங்குகளில் ஒரு வருடம் எல்லாம் ஓடி முன்னணி நடிகைகளை அதிர வைத்தது. ரஜினியின் படங்களை விடவும் ராமராஜன்ம்படங்களுக்கு கூட்டம் கூடியது. சில ராமராஜன் படங்கள் ரஜினி படங்களை விட அதிகம் வசூல் செய்ததுதான் சினிமாவின் வரலாறு.

ராமராஜன் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள்தான். மோகன் பட பாடல்கள் போல இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் உருவான பாடல்களும் இப்போதும் கூட 80 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருக்கிறது.

ramarajan

பல வருடங்கள் கழித்து ‘சாமானியன்’ என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ராமராஜன். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது இந்த படத்திற்கும் இசை இளையராஜாதான். அந்த பட விழாவில் பேசிய ராமராஜன் ‘இளையராஜா இல்லாமல் நான் இல்லை. என் படங்களின் வெற்றிக்கு அவரின் இசைதான் முக்கிய காரணம்’ என நெகிழ்ந்து பேசி இருந்தார்.

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராமராஜன் ‘நான் அண்ணன் இளையராஜாவை சந்திக்கும் போதெல்லாம் நீங்கள், கங்கை அமரன், அடுத்து நான்தான். நான்தான் உங்கள் தம்பி’ என சொல்வேன்.

ramarajan

ஒருமுறை என் தோள் மீது கைப்போட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த அண்ணன் இளையராஜா ‘நான் இதுவரை யார் தோள் மீதும் கைப்போட்டு புகைப்படம் எடுத்தது இல்லை. உனக்கு மட்டும்தான் இதை செய்திருக்கிறேன்’ என சிரித்துக்கொண்டே சொன்னார். ‘அது என் பாக்கியம்’ என அவரிடம் சொன்னேன்’ என ராமராஜன் பேசி இருந்தார்.

Next Story