அந்த விஷயத்துல நான் தான் டாப்...! மற்ற நடிகர்களுக்கு சவால் விடும் ராமராஜன்...
தமிழ் சினிமாவில் கிராம நாயகன் என போற்றப்படும் நடிகர் யாரென்றால் நடிகர் ராமராஜன். சும்மா வயக்காலில் வேட்டியை தூக்கிக் கட்டி வேலை பார்க்க ஆரம்பித்தாலே போதும் அந்த அழகை இன்றளவும் எந்த நடிகராலும் எட்ட முடியவில்லை.
கிராமங்களின் பின்னனியில் நடக்கும் கதைக்கு ஏற்ற நாயகனாகவே தன்னை தயார்படுத்திக் கொண்டார் நடிகர் ராமராஜன். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களின் வாழ்க்கையை பின்பற்றி வந்தவன் என அடிக்கடி கூறும் நடிகர் ராமராஜன் தன் படங்களில் மது, மாது போன்றவறை புகுத்த விரும்பாதவர்.
கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்த ராமராஜன் தன்னுடைய 45வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரசிகர்களை சந்தித்தார். அவரது 45வது படம் சாமானியன். இந்த படத்தில் ஹீரோவாகவே நடிக்கிறார்.
இதையும் படிங்கள் : தலைவரே தயவுசெய்து 2ம் பாகம் வேண்டாம்…! வெந்து தணிந்தது காடு படத்தை பற்றி நொந்து கொண்ட ரசிகர்கள்….
இந்த படத்தின் விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராமராஜன் 50 படம் நடித்தாலும் அதில் ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் இது 45வது படம். இதுவரை தொடர்ந்து 50 படங்களிலும் தனியாகவே ஹீரோவாக நடித்த எந்த நடிகராக இருக்கிறார்களா? என்று கேட்டுப்பாருங்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் நான் தொடர்ந்து 45 படங்களிலும் சோலோ ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறேன். இது எனக்கும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.