அந்த ஒரு விஷயத்திற்காக நான்கு வருடம் போராடினேன்… தேவாவிற்கு உதவிக்கரம் நீட்டிய ராமராஜன்!..

Published on: May 13, 2023
---Advertisement---

கிராமிய கானா பாடல்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா சினிமாவில் பாடல்களுக்கு இசையமைத்த காலகட்டத்தில் அவரது பாடல்களுக்கு என்று தனிப்பெரும் ரசிக்கப்பட்டாளம் இருந்தது. இப்போது வரை பேருந்துகளில் அதிகமாக தேவா பாடல்களை நாம் கேட்க முடியும்.

நாட்டுப்புற கானா பாடல்கள் சினிமாவில் கொண்டு வந்து அதை பெரும் ஹிட் கொடுத்தவர் தேவா. ஆனால் தேவாவின் உண்மையான பெயர் தேவா கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்களின் உண்மையான பெயர் என்னவென்று யாருக்குமே தெரியாது.

deva
deva

இயக்குனர் தேவா சினிமாவிற்கு அறிமுகமான பொழுது எந்த பெயரில் அறிமுகமாவது என்கிற சிக்கல் அவருக்கு இருந்தது. அவர் நியூமராலஜி எனப்படும் பெயர் ராசியை அதிகமாக நம்பினார். எனவே அதற்கு ஏற்றார் போல ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று முதலில் மனோரஞ்சன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார். ஆனால் அது அவருக்கே அவ்வளவாக பிடிக்கவில்லை.

அதன் பிறகு நாடோடி சித்தன் என்கிற பெயரில் அறிமுகமானார். நாடோடி சித்தன் என்கிற பெயரில் ஒரு படத்திற்கும் இசையமைத்தார் ஆனால் அது அவருக்கு அவ்வளவு ராசியாக தெரியவில்லை.

ராம ராஜன் கொடுத்த பெயர்:

அதன் பிறகு மற்றொரு படத்திற்கு தேவா பிரதர்ஸ் என்கிற பெயரில் இசையமைத்தார். அதுவும் அவருக்கு அவ்வளவு ராசியான பெயராக தோன்றவிலை. இப்படியே நான்கு வருடங்கள் சென்றன. அடுத்ததாக ராமராஜன் படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு தேவாவிற்கு கிடைத்தது.

Ramarajan
Ramarajan

அப்பொழுது சி. தேவா என்கிற பெயரில் ராமராஜன் படத்தில் இசையமைக்க இருந்தார் தேவா. ஆனால் ராமராஜன் சி தேவா என்பதை விட வெறும் தேவா நன்றாக இருக்கிறது என பரிந்துரைத்துள்ளார். தேவா என வையுங்கள் நன்றாக வருவீர்கள் என கூறியுள்ளார் ராமராஜன்.

அதன் பிறகுதான் தேவா என்கிற பெயரில் இசையமைக்க தொடங்கினார் அது அவருக்கு ஒரு நல்ல ராசியான பெயராகவும் தெரிந்தது. அதே போல அந்த பெயரே அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.