Categories: latest news

வெங்கட் பிரபு படமே வேண்டாம்னு சொன்ன ரியல் கோட் ராமராஜன் தான்!.. என்ன மேட்டருன்னு தெரியுமா?..

500 கோடி கொடுத்தாலும் சரக்கு அடிப்பது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிற கொள்கையுடன் பல வருடங்களாக நடித்து வருகிறார் நடிகர் ராமராஜன். சாமானியன் என்னும் படத்தில் பல வருடங்கள் கழித்து ராமராஜன் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் ராமராஜன் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் சரக்கு அடிப்பது புகைப்பிடிப்பது போன்ற எந்த ஒரு சீனிலும் தான் நடிக்கவே மாட்டேன் என கூறியுள்ளார். பல முன்னணி நடிகர்கள் இப்படி ஒரு கொள்கையை பின்பற்றாமல் காசுக்காக சரக்கு மற்றும் தம்மை இளைஞர்கள் மத்தியில் எந்த அளவுக்கு விஷமாக திணிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு திணித்து வருகின்றனர் என ராமராஜன் ரசிகர்கள் முன்னணி நடிகர்களை விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: ப்பா! பேய் மாதிரி இருக்கு!.. ஓவர் மேக்கப்பில் நயன்தாரா.. புது லுக்கை பார்த்து பயந்து போன ஃபேன்ஸ்!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான பார்ட்டி படத்தில் நடிப்பதற்காக சத்யராஜுக்கு முன்னதாக வெங்கட் பிரபு அணுகியது ராமராஜன் தானாம். அப்போது அந்த படத்துக்கு டைட்டில் கூட வைக்காத நிலையில் ராமராஜன் படத்தின் கதை சிலோனில் நடக்கிறது என வெங்கட் பிரபு சொன்னதும் இது நமக்கு செட்டாகாது, நான் அரசியலில் உள்ளேன். சிலோனுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தினார் சர்ச்சை வெடிக்கும் என அப்போதே கூறி மறுத்துவிட்டாராம்.

அதன் பின்னர் தான் படத்தின் பெயர் பார்ட்டி என அறிவிக்கப்பட்டு டைட்டிலே பாட்டில் டிசைனில் வெளியானபோது அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நல்லவேளை இந்த படத்தில் கங்கை அமரன் முகத்திற்காக பார்த்து நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்து நிம்மதி பெருமூச்சு விட்டேன் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?

இப்படி ஒரு நடிகரை இதற்கு மேல் தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியாது படம் முழுக்கவே சரக்கு தம் என அடித்தால் தான் ஹீரோவே என்கிற நிலைமைக்கு சமீப காலமாக இயக்குனர்கள் மாற்றி வைத்திருக்கின்றனர் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

முன்னணி நடிகர்கள் இளம் சமுதாயத்துக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்றும் அதெல்லாம் மொத்தமாக மாறி ஆபாச காட்சிகளில் எப்படி நடிக்கலாம், ஆபாச வசனங்களை எப்படி பேசி நடிக்கலாம், நிர்வாணமாக நடிக்க சான்ஸ் கிடைக்குமா என்று தான் சுற்றித் திரிகின்றனர் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அம்மா சொன்னதால் மியூசிக் போட்ட இளையராஜா!.. இசைஞானிக்கு இவ்வளவு தாய்ப்பாசமா?!..

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

4 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

5 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

6 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

19 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

19 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago