ராமராஜன் சந்தித்த கார் விபத்து!. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!.. தெரியாம போச்சே!…

0
348
Ramarajan
Ramarajan

சினிமாவில் ஆபிஸ் பாயாக நுழைந்து பின்னர் உதவி இயக்குனராக மாறி அதன்பின் நடிகராக மாறியவர் ராமராஜன். இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூலில் சக்கை போட்டு போட்டது. 80களின் பாதியில் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சுமார் 10 வருடங்கள் கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருந்தார்.

இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்றார்கள். ராமராஜனின் படங்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்து ரஜினி, கமல் போன்றவர்களே ஆச்சர்யப்பட்டார்கள். கமலின் அபூர்வ சகோதரர்கள் வெளியாகி 2 மாதங்களில் வெளியான படம்தான் கரகாட்டக்காரன். ஆனால், அபூர்வ சகோதரர்களை விட கரகாட்டக்காரன் பல மடங்கு வசூல் செய்தது.

இதையும் படிங்க: ஓரினச்சேர்க்கையாளர் என தெரியாமல் காதலித்த வாரிசு பட நடிகை! அட இவங்களா?

உடனே ராமராஜனை தனது அலுவலகத்திற்கு அழைத்த கமல் ‘எப்படி முடி கலையாம நடிக்கிறீங்க?.. உங்க தலைமுடியே விக்கு மாதிரிதான் இருக்கு.. நான் கஷ்டப்பட்டு குள்ளமா நடிச்சேன். ஆனா நீங்க கரகத்தை வச்சி நடிச்சி என்ன ஓவர் டேக் பண்ணீட்டீங்க’ என பாராட்டிய சம்பவமும் நடந்தது.

ராமராஜன் நடித்ததில் பெரும்பாலான படங்கள் கிராமப்புற கதைகள்தான். எனவே, சி செண்டர் என சொல்லப்படும் கிராமபுறங்களில் ராமராஜனின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. அதனால், மக்கள் நாயகன் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது. ஆனால், மனைவி நளினியை பிரிந்த பின் அவரின் படங்கள் ஓடவில்லை. சில படங்களை இயக்கி நடித்தார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை.

Ramarajan
Ramarajan

அதோடு அரசியலுக்கும் போய்விட்டதால் கடந்த 12 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை ராமராஜன். தற்போது சாமானியன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். கடந்த ஒரு மாத காலமாகவே நிறைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் ராமராஜன். இந்நிலையில், தான் சந்தித்த கார் விபத்து பற்றி பேசியிருக்கிறார்.

ஒரு அரசியல் மீட்டிங்கை முடித்துவிட்டு வரும்போது கார் விபத்து நடந்தது. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் உயிர் பிழைப்பேனா என்கிற சந்தேகம் மருத்துவர்களுக்கே இருந்தது. உயிர் பிழைத்தபின் எனக்கு பழசெல்லாம் மறந்துவிடும் என சொன்னார்கள். ஆனால், எனக்கோ எல்லாமே நினைவில் இருந்தது. கடைசி மீட்டிங்கில் நான் என்ன பேசினேன் என பேசிப்பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு அதிகமான நினைவு வந்துவிட்டது’ என சுவாரஸ்யமாக ராமராஜன் சொன்னார் ராமராஜன்.

google news