சூப்பர் ஹிட் படத்தில் ராமராஜன் நடிக்க மறுத்த காரணம்!. எம்.ஜி.ஆருக்கு அப்புறம் இவர்தான்!
Ramarajan: இயக்குனர் இராமநாராயணனிடம் உதவியாளராக வேலை செய்தவர் குமரேசன். 4 திரைப்படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தனது பெயரை ராமராஜன் என மாற்றிக்கொண்டார். இவர் நடித்ததில் பெரும்பாலானவை கிராமத்து கதை கொண்ட திரைப்படங்களாகும்.
எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன் என இவரின் பெரும்பாலான படங்களின் தலைப்பில் ஊரு என்கிற வார்த்தை இடம் பெற்றிருக்கும். சி செண்டர் என சொல்லப்படும் கிராமப்புறங்களில் ராமராஜன் படங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. கிராமப்புறங்களில் இவருக்கு ரசிகர்களும் அதிகம்.
இதையும் படிங்க: கட்சிக்கொடி விவகாரம்! விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறதா?
ராமராஜனின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜாதான். இன்னும் சொல்லப்போனால் ராமராஜன் படங்கள் பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம் இளையராஜாவின் பாடல்கள்தான். அதேபோல், கவுண்டமணி - செந்தில் காமெடி காட்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தது.
ராமராஜனின் படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பார்த்து ரஜினி, கமல் போன்ற நடிகர்களே ஆச்சர்யப்பட்டனர். குறிப்பாக ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் இமாலய வெற்றியை பெற்ற சில தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது.
இதையும் படிங்க: இயக்குனராவதற்கு முன் மாரி செல்வராஜ் என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க!..
ராமராஜனை வைத்து கஸ்தூரி ராஜா ஒரு திரைப்படத்தை இயக்கவிருந்தார். இளையராஜவின் இசையில் உருவாக இருந்த அந்த படத்தில் ஹீரோ மது அருந்துவது போலவும், பீடி குடிப்பது போலவும் காட்சிகள் இருந்தது. இதைக்காரணம் காட்டி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் ராமராஜன்.
எனவே, அந்த படத்தின் தயாரிப்பாளரே ஹீரோவாக அறிமுகமானார். அதுதான் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே. 60களில் எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களில் புகை பிடிப்பது போலவோ, மது அருந்து போலவோ காட்சிகள் இருப்பதை விரும்பமாட்டார். இதையேதான் ராமராஜனும் கடைசிவரை கடைபிடித்தார். அதேநேரம், ராமராஜன் நடிக்க மறுத்ததால்தான் ராஜ்கிரண் என்கிற ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.