கொடுத்த பரிசைத் திருப்பி கேட்கலாமா..? ரம்பாவிடம் மல்லுக்கட்டும் கவுண்டமணி குடும்பம்
90களின் கனவுக்கன்னி, தொடையழகி, கவர்ச்சித் தாரகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. உழவன் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. 'அழகிய லைலா' பாடல் அந்தக் காலகட்டத்தில் ரொம்பவே பாப்புலராக இருந்தது.
இளம் ரசிகர்கள் மத்தியில் ரம்பாவின் பெயரை உச்சரிக்க வைத்தது. ஸ்டைலான அவரது நடனம் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தது. தற்போது ரம்பாவைப் பற்றி ஒரு செய்தி இணையதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இது உண்மையா என்று பார்ப்போம்.
90களில் நடிகை ரம்பாவுக்கு பரிசாக வீடு வாங்கி கொடுத்தாராம் கவுண்டமணி. 34 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த வீட்டின் மதிப்பு பலகோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த வீட்டை ரம்பாவிடம் கவுண்டமணி குடும்பம் திரும்பக் கேட்கிறதாம். ஆனாலும் விடாப்பிடியாகக் கொடுக்க முடியாது என்கிறாராம் ரம்பா.
பிரச்சனை கோர்ட் வரை சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ரம்பாவுடன் இணைந்து கவுண்டமணி உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம், அழகான நாட்கள், செங்கோட்டை, தர்மசக்கரம், அருணாச்சலம், ராசி, விஐபி, என்றென்றும் காதல், மின்சார கண்ணா என பல படங்களில் நடித்துள்ளார்.
கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் ரம்பா தமிழ்சினிமாவில் கோலூச்சினார். அவரது இயற்பெயர் விஜயலட்சுமி. திரை உலகின் உச்சத்தில் இருந்த போது ரம்பாவுக்கு பரிசாக வீட்டைக் கொடுத்தார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது இருவரும் வீட்டுக்காக கோர்ட் படி ஏற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு வீட்டை மீட்டார்களா என்று தகவல் இல்லை.
திரை உலகின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார் ரம்பா. அதன்பிறகு குடும்பம், குழந்தை குட்டிகள் என்று இருந்த ரம்பா தற்போது மீண்டும் கேமரா பக்கம் திரும்பி உள்ளார். ஜோதிகா, சிம்ரன் மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளதால் ரம்பாவும் மீண்டும் வருவார் என்றும் சொல்லப்படுகிறது.