Connect with us

கண்டவனையெல்லாம் ஏன் கட்டிப்புடிக்கிறீங்க? ரம்பாவை எச்சரித்த மகள்!

rambha

Cinema News

கண்டவனையெல்லாம் ஏன் கட்டிப்புடிக்கிறீங்க? ரம்பாவை எச்சரித்த மகள்!

1993ஆம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்பா. அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

விஜயலட்சுமி என்ற தனது உண்மை பெயரை திரைப்படத்திற்காக முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். இதுவரை தொடை அழகி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

rambha

rambha

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்திய ரம்பாவுக்கு சபா, லாவண்யா ,ஷிவின் என இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் ரம்பா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது, என் மகள் படத்தில் ஹீரோக்களை கட்டியணைப்பதை பார்த்து கண்டவனையெல்லாம் ஏன் கட்டிப்புடிக்கிறீங்க? என கேட்பாள். என் வேலை அப்படி… என கூறினால். என்னது? கட்டிப்பிடிக்குறது உங்களுக்கு வேலையா? என கேட்பாள். எனக்கே அசிங்கமாக இருக்கும். பிள்ளைகள் அந்த அளவிற்கு நுணுக்கமாக இருக்கிறார்கள். நாம் தான் அவர்கள் முன் சரியாக நடந்துக்கொள்ளவேண்டும் என ஒரு வித கூச்சத்துடன் கூறினார்.

https://fb.watch/8DyiEx_ynp/

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top