விவாகரத்து வரை சென்ற திருமண வாழ்க்கை… மீண்டும் கணவருடன் இணைந்த 90’ஸ் நடிகை….!

Published on: February 26, 2022
ramba
---Advertisement---

சமீபகாலமாக திரைபிரபலங்கள் பலர் அடுத்தடுத்து அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

இந்நிலையில் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒருவர் விவாகரத்து வரை சென்று பின் மீண்டும் தன் கணவருடன் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல தொடையழகி ரம்பா தான். ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவையே கலக்கு கலக்கு என கலக்கியவர் தான் ரம்பா. கார்த்தி நடிப்பில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் ரம்பா.

ramba

அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என பல மொழி படங்களில் நடித்து கலக்கி வந்த ரம்பா. தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரம்பா அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது ரம்பா, “என்னையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது. எனவே எனக்கு 1.5 லட்சம் ரூபாய், குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மாதம் 2.5 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கும்படி, கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

rambha
rambha

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை சமரச மையத்தில் பேசி தீர்த்து கொள்ளுமாறு ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் அறிவுரை கூறினார். அதன்படி பேசிய இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அடையாளமாக சேர்ந்து வாழ தொடங்கிய அடுத்த ஆண்டே ரம்பா மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது சிறிய பிரச்சனைக்கெல்லாம் விவாகரத்து செய்யும் நடிகர் மற்றும் நடிகைகளுக்க ரம்பா ஒரு முன்னுதாரணமாக உள்ளார். விவாகரத்து வரை சென்று மீண்டும் தனது கணவருடன் ரம்பா இணைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment