Rambha: ‘நினைத்தேன் வந்தாய்’ படத்துல வேண்டானே சொல்லிட்டாங்க.. ரம்பாவுக்கா இப்படி நடந்துச்சு?

vijay_rambha
Rambha: 90கள் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தமிழில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமான ரம்பா தொடர்ந்து சுந்தர புருஷன், உள்ளத்தை அள்ளித்தா, நினைத்தேன் வந்தாய் போன்ற தொடர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்தார். சிம்ரனை எப்படி இடுப்பழகி என்று சொல்கிறோமோ அதைப்போல ரம்பாவை தொடையழகி என்று தான் அனைவரும் குறிப்பிடுவார்கள் .
அவருடைய அந்த ஸ்வேக், ஸ்டைல், நடை என அப்போதைய காலகட்ட இளைஞர்களுக்கு மனம் கவர்ந்த நடிகையாகவே மாறினார் ரம்பா. விஜய்யுடன் தொடர்ந்து படங்களில் நடித்து விஜயின் ஆஸ்தான நடிகையாகவும் பார்க்கப்பட்டார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் நினைத்தேன் வந்தாய். முதலில் நினைத்தேன் வந்தாய் படத்திற்கு ரம்பாவை வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் அது தமிழில் ரிலீசான நினைத்தேன் வந்தாய் திரைப்படம் கிடையாது. தெலுங்கில் தான் முதன் முதலில் அந்த படம் உருவானது. அதில் ஸ்ரீகாந்த், ரவளி ,தீப்தி போன்றோர் நடித்திருந்தனர். பெல்லி சந்தடி என்ற பெயரிடப்பட்ட அந்தப் படம் தான் பின்னாளில் தமிழில் நினைத்தேன் வந்தாய் என ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. தெலுங்கில் இந்த படத்திற்கு முதலில் கமிட்டாகி ஒரு பல்க்கான கால்ஷீட் கொடுத்து வைத்திருந்தாராம் ரம்பா.
தமிழை பொறுத்த வரைக்கும் முதலில் ரம்பாவை காட்டும் பொழுது கண் ,மூக்கு, வாய் இப்படித்தான் காட்டுவார்கள். அப்படி தெலுங்கிலும் காட்டினால் இது ரம்பா என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் இந்த கேரக்டர் இல்லாமல் வேறு கேரக்டரில் வேண்டுமென்றால் நடிங்கள் என ரம்பாவை வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ரம்பாவுக்கு இது துளியும் இஷ்டம் இல்லையாம்.

என்னை லீடு ரோலில் நடிக்கத்தானே அழைத்தீர்கள்? இப்போது வேறு ஒரு கேரக்டரில் நடி என்றால் எப்படி என்னால் முடியும் .அதனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் ரம்பா. அதனால் இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட அந்த பல்க்கான கால்ஷீட் அப்படியே இருக்க வீட்டில் சும்மாவே இருந்தாராம். அந்த நேரத்தில் தான் சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வாய்ப்பு ரம்பாவுக்கு வந்திருக்கிறது. இப்படித்தான் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நடிக்க வந்தேன் என ரம்பா ஒரு பேட்டியில் கூறுகிறார்.