கஷ்டப்பட்டு வந்தவங்களுக்குத்தான் தெரியும்.. என் வலியை புரிஞ்சுக்கிட்டு அஜித் வந்தாரு! இயக்குனரின் சோகம்

ajith
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலத்தில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு வந்து சினிமாவில் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார். மேலும் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் அவராகவே முன்னுக்கு வந்து ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்.

ajith1
அதனாலேயே சினிமாவில் கஷ்டப்பட்டு வரும் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டார் அஜித். அவர் சினிமாவில் வந்த புதுதில் ஏகப்பட்ட வெற்றி தோல்விகளை பார்த்து வளர்ந்தவர். மேலும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் இன்று வரை அந்த ரேஸை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் திருப்பு முனையாக இருந்த படம் காதல் கோட்டை. அந்தப் படத்திற்கு பிறகு அதே காம்போவில் மீண்டும் ஒரு படத்தில் நடித்தார் அஜித். அந்தப் படம்தான் தொடரும். ஆனால் அந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் ஜெயராம் மற்றும் மீனாவாம்.

ajith2
அந்தப் படத்தை ரமேஷ் கண்ணா இயக்கினார். அந்த நேரத்தில் பெப்சி பிரச்சினையால் ஜெயராம் மீனா நடிக்க இருந்தப் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம். சில நாள்கள் கழித்து அதே தயாரிப்பு நிறுவனம் இந்தக் கதையை அஜித்திடம் வேண்டுமென்றால் போய் கேளுங்கள் என்று ரமேஷ் கண்ணாவை அனுப்பியிருக்கின்றனர்.
ஆனால் ரமேஷ் கண்ணாவிற்கு நம்பிக்கையே இல்லையாம். ஏனெனில் இதற்கு முன் தான் இதே கூட்டணியில் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த அஜித் இந்தப் படத்தில் அதுவும் ஒரு குழந்தைக்கு அப்பாவாக எப்படி நடிப்பார் என்ற சந்தேகத்திலேயே போய் கேட்டிருக்கிறார். ஆனால் கொஞ்சம் கூட அஜித் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டாராம்.

ajith3
அதுமட்டுமில்லாமல் அஜித்தின் உதவியாளர்களில் சில ரமேஷ் கண்ணாவை பற்றி ‘இவர் இதுவரை எடுத்தப் படங்கள் எதுவும் ஓடவில்லை’ என்றும் கூறினார்களாம். ஆனால் அஜித் ஐயோ கஷ்டப்பட்டு வருகிறார். என்னைப் போலவேதான் இவரும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தாராம். இதை ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : பல நடிகைகளுடன் தொடர்பு.. அசிங்கமாக எழுதிய பத்திரிக்கையாளர்.. எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி!…