Connect with us

அவங்க காதலுக்கு நான் தான் தூது போனேன்…. காதல் ரகசியம் பகிர்ந்த காமெடி நடிகர்….!

ramesh kanna

Cinema News

அவங்க காதலுக்கு நான் தான் தூது போனேன்…. காதல் ரகசியம் பகிர்ந்த காமெடி நடிகர்….!

கோலிவுட்டில் பல காதல் நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள தம்பதி என்றால் அது சூர்யா ஜோதிகா தான். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்தது, பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டது அனைத்துமே ஊர் அறியும்.

தற்போது இவர்கள் காதல் செய்த சமயத்தில் இருவரின் காதலுக்கும் தான் தூது சென்றதாக பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா கூறியுள்ளார். நடிகர் ரமேஷ் கண்ணா சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவருடனும் இணைந்து நடித்துள்ளார்.

surya jyothika

இந்நிலையில் பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுடன் ரமேஷ் கண்ணா இணைந்து நடித்து கொண்டிருந்த அதே சமயத்தில் நடிகை ஜோதிகாவுடனும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்துள்ளார். எனவே இவர்கள் 2 பேரின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் ரமேஷ்கண்ணா கலந்து கொள்வாராம்.

அப்போது நடிகர் சூர்யா ஷூட்டிங்கின் போது ஜோதிகாவை கேட்டதாக சொல்ல சொல்வாராம். ரமேஷ் கண்ணாவும் ஜோதிகாவிடம் சென்று சூர்யா உங்களை கேட்டதாக சொன்னார் என கூறுவாராம்.

அதற்கு ஜோதிகாவும் சூர்யாவையும் கேட்டதாக சொல்லுங்கள் என கூறுவாராம். இவ்வாறு இவர்கள் இருவரின் காதலுக்கும் நான் தூது சென்றிருக்கிறேன் பல வருடங்கள் கழித்து நடிகர் ரமேஷ் கண்ணா சூர்யா ஜோதிகா காதல் கதையை நினைவு கூர்ந்துள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top