எம்.ஜி.ஆரின் காதலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த ரமேஷ் கண்ணாவின் தந்தை… என்னப்பா சொல்றீங்க??
எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்ற செய்தியை பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் அவர்கள் இருவருக்குள்ளும் எப்போது காதல் மலர்ந்தது என்பதை குறித்தும் அவர்கள் காதலுக்கு தடையாக இருந்த நடிகர் ரமேஷ் கண்ணாவின் தந்தையை குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1948 ஆம் ஆண்டு தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், பானுமதி, வி.என்.ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராஜ முக்தி”. இத்திரைப்படத்தை ராஜ சந்திரசேகர் இயக்கியிருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதரே இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர், ஜானகியை முதன்முதலில் சந்தித்தாராம். ஜானகியின் தோற்றம் இறந்துப்போன தன்னுடைய முன்னாள் மனைவியின் தோற்றம் போல் இருந்ததாம். ஆதலால் ஜானகியை பார்த்தவுடனே எம்.ஜி.ஆர் திகைத்துப்போய் நின்றுவிட்டாராம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பிலேயே ஜானகியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கிவிட்டாராம் அவர்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஒன்றாக நடிக்கத் தொடங்கினார்கள். இதில் “மருதநாட்டு இளவரசி” திரைப்படத்தின்போது ஜானகியும் எம்.ஜி.ஆரை காதலிக்கத் தொடங்கிவிட்டாராம்.
ஆனால் இவர்களின் காதலுக்கு பிரபல நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் தந்தை முட்டுக்கட்டையாக இருந்தாராம். ரமேஷ் கண்ணாவின் தந்தை ஜானகிக்கு மாமா முறை வேண்டுமாம்.
எம்.ஜி.ஆர்-ஜானகியின் காதலுக்கு மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்தாராம் ரமேஷ் கண்ணாவின் தந்தை. எனினும் அந்த முட்டுக்கட்டை எல்லாவற்றையும் முறியடித்து தனது காதலை வென்றாராம் எம்.ஜி.ஆர்.