இயக்குனரால் கண்ணீர் விட்ட சூதுகவ்வும் நடிகர்… ஆனா அடுத்த நாள் நடந்ததுதான் சர்ப்ரைஸ்!.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகரும் மக்கள் மத்தியில் தங்களுக்கான அங்கீகாரத்தை பிடிப்பதற்கு வெகுவாக போராட வேண்டி உள்ளது. சில நடிகர்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் கூட அதை சிறப்பாக செய்து மக்கள் மத்தியில் பெயர் வாங்கி விடுகின்றனர்.
அப்படி தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் திலக். முதன் முதலாக சூது கவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருந்தார் ரமேஷ் திலக். அதில் பலரது மனம் கவர்ந்த கதாபாத்திரமாக ஆனதால் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார்.
அதனை தொடர்ந்து வாயை மூடி பேசவும், காக்கா முட்டை, டிமாண்டி காலணி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது அவர் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பேசியிருந்தார்.
ரமேஷ் திலக்கிற்கு நேர்ந்த சங்கடம்:
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு எதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தீவிரமாக வாய்ப்பு தேடி கொண்டிருந்தார் ரமேஷ் திலக். அப்போது ஒரு படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் 2 நாட்களில் படப்பிடிப்பு துவங்க இருந்தது. ஆனால் மறுநாள் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவரை எடுத்துவிட்டனர். பல வருட காத்திருப்புக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு போனதால் இரவு முழுவதும் கண்ணீர் சிந்தியுள்ளார் ரமேஷ் திலக்.
மறுநாள் காலையில் எழும்போது அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அப்போதுதான் அவருக்கு சூதுகவ்வும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.