இந்த மாதிரி உங்களால செய்ய முடியுமா? ரஜினியை வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குனர்…

Published on: December 8, 2021
rajinikanth
---Advertisement---

தெலுங்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் தற்போது டிரெண்டிங்கில் இருந்து வருவது புஷ்பா படம் தான். பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் டிரைலர் வெளியான குஷியில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் டிரைலரை வைத்து டாப் நடிகர்களை வம்பிழுத்துள்ளார் சர்ச்சை இயக்குனர்.

ramgopal varma
ramgopal varma

அவர் வேறு யாருமல்ல சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மா தான். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு டிவிட்டரில் பதிவு ஒன்றை செய்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “இது போன்று பயமில்லாமல் தத்ரூபமாக நடிக்க அல்லு அர்ஜூன் என்ற ஒற்றை சூப்பர் ஸ்டாரால் தான் முடியும். பவன் கல்யாண், மகேஷ் பாபு , சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் இது போலவோ அல்லது இதற்கு மேலாகவோ செய்ய தைரியம் இருக்கா. புஷ்பா என்றால் பூ என அர்த்தமில்லை. அது நெருப்பு” என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ramgopal varma

ராம் கோபால் வர்மா இவ்வாறு பேசுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக பல பிரபலங்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை இவர் பேசியுள்ளது ரஜினிகாந்த் , மகேஷ்பாபு போன்ற ஸ்டார் நடிகர்களின் ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனையடுத்து டிவிட்டரில் ராம்கோபால் வர்மாவை சகட்டுமேனிக்கு திட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment