அப்பவே ஒத்த செருப்பு மாதிரி கதை… ராம்ஜி இயக்கத்தில் நடிக்கவிருந்த ஹீரோயின்?

X
அப்பவே ஒத்த செருப்பு மாதிரி கதை… ராம்ஜி இயக்கத்தில் நடிக்கவிருந்த ஹீரோயின்?

எழுதுவதில், பேசுவதில் எப்பவும் வித்தியாச வார்த்தை ஜாலங்கள் செய்யும் பார்த்திபன் படமெடுப்பதில் மட்டும் சும்மா விடுவாரா? இவர் எடுத்த புதிய முயற்சி தான் 2019-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ‘ஒத்த செருப்பு’ படம்.

படம் முழுக்க பார்த்திபன். பார்த்திபன்.. பார்த்திபன்…. மட்டுமே. மற்ற கேரக்டர்கள் எல்லாருமே குரல்கள் மூலம் மட்டுமே உயிர் கொடுத்திருந்தார்கள். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராம்ஜி.

சமீபத்தில், ஒளிப்பதிவாளர் ராம்ஜி கொடுத்த பேட்டியில் ‘ஒத்த செருப்பு’ குறித்து பேசுகையில் “பார்த்திபன் சார் எனக்கு அப்பப்போ போன் பண்ணி படம் பண்ணனும்ன்னு சொல்லிட்டே இருப்பாரு.

நானும் பண்ணலாம் சாருன்னு சொல்லுவேன். ஆனா, மிஸ் ஆயிட்டே இருந்துச்சு. அப்புறம் திடீர்ன்னு ஒரு நாள் மீட் பண்ணி என்கிட்ட ‘ஒத்த செருப்பு’ படத்தோட கதையை சொன்னாரு.

ஆக்ச்சுவலா என்னன்னா, 2001-ல நானும் இதே மாதிரி ஒரு கதை வச்சிருந்தேன். அது வந்து female centric. அப்போ நான் ஒரு ஹிந்தி படம் பண்ணிட்டு இருந்தேன். அதுல நந்திதா தாஸ் தான் ஹீரோயின்.

அவங்க கிட்ட என்னோட கதையை சொன்னேன். அவங்க நல்லா இருக்கு சார் ஐடியா, நான் இதை பண்றேன்னு சொன்னாங்க. நானே தான் இதை தயாரிச்சு, இயக்கப்போறேன், ஒரு 8 நாள்தான் ஷூட்டிங் இருக்கும்ன்னு சொன்னேன். அவங்க வந்து பண்ணித் தர்றேன்னு சொன்னாங்க.

ஆனா, அப்போ என்னால அந்த படத்தை பண்ண முடியல. அப்படியே தள்ளி போயிட்டே இருந்துச்சு. இப்போ அதே மாதிரி ஒரு கதையை வந்து பார்த்திபன் சார் என்கிட்ட சொன்னதும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

சார் இதே மாதிரி ஒரு ஐடியா நானும் வச்சிருந்தேன், அது மாதிரியே நீங்களும் பண்றீங்கன்னு சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோஷம்ன்னு சொன்னேன். அடுத்து ஒரு 10 நாள்ல ஷூட்டிங் கிளம்பிட்டோம்” என்று கூறியுள்ளார்.